For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண் வேடத்தில் சுற்றித் திரியும் வடமாநிலத்தவர்... குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவரா?

பெண் வேடத்தில் சுற்றித் திரிந்த வடமாநிலத்தவரை உள்ளூர் இளைஞர்கள் கடுமையாக தாக்கி அவரை கட்டி போட்டுள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    வடமாநிலத்தவர்...குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவரா?-வீடியோ

    ஊத்துக்கோட்டை: குழந்தைகளை கடத்துவதற்காக பெண் வேடத்தில் சுற்றித் திரிந்ததாக வடமாநில இளைஞரை உள்ளூர்வாசிகள் பிடித்து கடுமையாக தாக்கினர்.

    தற்போது குழந்தை கடத்தல் மிகவும் தீவிரமாக உள்ளது. இதனால் போலீஸ் தரப்பில் இருந்து பெற்றோருக்கு பல்வேறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன.

    A north indian youth is in lady getup to abduct the child?

    பெரும்பாலான குழந்தைகள் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. எத்தனை குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளன என்ற புள்ளிவிவரங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், ஊத்துப் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, பாலவாக்கம் கிராமத்தில், சுடிதார் அணிந்து கொண்டிருந்த பெண் ஒருவர் சுற்றிக் கொண்டிருந்தார்.

    அவர் மீது சந்தேகம் அடைந்த உள்ளூர்வாசிகள் அருகில் சென்றபோது அவர் பெண்ணல்ல, ஆண் வேடமிட்டிருப்பவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது இந்தியில் பேசியதால் அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர் அணிந்திருந்த உடையை கிழித்து சோதனையிட்டதில் அவர் பெண் இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் அவரை சரமாரியாக அடித்து கை கால்களை கட்டி ஊத்துக்கோட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

    அவரிடம் இருந்து குழந்தைகள் விளையாட்டு பொருட்கள், கூர்மையான கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் அவர் குழந்தைகளை கடத்துவதற்காக பெண் வேடத்தில் வந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

    English summary
    A north Indian youth who is in lady getup attacked by some local youths in the suspection of child abduction.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X