For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொடரும் அரசு கட்டிட விபத்துகள்.. கனமழையால் நாகையில் தீயணைப்பு கட்டிடம் இடிந்தது!

நாகையில் விடிய விடிய பெய்த கனமழையால் தீயணைப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நாகை: நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நேற்று விடிய விடிய பெய்த கனமழையால் தீயணைப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இன்னும் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்த கட்டிடம் மிகவும் புராதனமான பழைய கட்டிடம் ஆகும். இது 1943ல் கட்டப்பட்ட கட்டிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் மிகவும் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது.

A old fire service station has collapsed today in Nagai

இந்த நிலையில் நேற்று நாகையிலும் மிகவும் அதிக அளவில் மழை பெய்தது. நேற்று இரவு ஆரம்பித்த மழை விடாமல் இரவு முழுக்க பெய்தது. இந்த கொடூரமான மழை காரணமாக நிறைய பகுதிகள் பாதிப்பு அடைந்தது.
இதையடுத்து நாகை மாவட்டத்தில் இருக்கும் முக்கிய கட்டிடங்கள் பல இதன் காரணமாக சிறிய அளவில் சேதம் அடைந்தது . சில இடங்களில் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தது.

இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் இருக்கும் தீயணைப்பு கட்டிடம் ஒன்று நேற்று பெய்த கனமழை காரணமாக இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிடம் மிகவும் பழைமையான புராதான கட்டிடம் ஆகும். இது ஆங்கிலேயர் காலத்தில் 1943ல் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஏதும் உயிரிழப்புகள் நேர்ந்து இருக்கிறதா என்பது தெரியவில்லை. நாகையில் அரசுக்கட்டிடங்கள் இடிந்து விழுந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அங்கு அரசு போக்குவரத்து பணிமனையின் ஓய்வறை ஒன்று இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Due to heavy rain in in Nagai a old fire service station has collapsed today. In this incident no news about injuries has came. This building has build on 1943 by English People.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X