For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைவு.. 4வது மாடியில் இருந்து குதித்து கோவையில் மாணவி தற்கொலை முயற்சி!

பிளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்ததால் கோவையில் மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

கோவை: பிளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்ததால் கோவையில் மாணவி ஒருவர் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 1-ந் தேதி துவங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது. இதில் தனித்தேர்வர்கள் உட்பட 9 லட்சத்து ஏழாயிரத்து 620 பேர் தேர்வெழுதியிருந்தனர்.

A plus 2 student named Priya committed suicide attempt after getting less mark

விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in. என்ற இணையதள முகவரிகளில் இன்று வெளியானது.

இதில் 91.1% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் கோவையில் ப்ரியா என்ற மாணவி ப்ளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் தற்கொலைக்கு முயன்றார்.

யாரும் எதிர்பாராத நேரத்தில் 4-வது மாடியிலிருந்து குதித்து அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பிரியாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

English summary
A plus 2 student named Priya committed suicide attempt after getting less mark in plus 2 exam. Priya jumped from 4th floor, and now she has been admited in the hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X