For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் இடிக்கப்பட்ட இம்மானுவேல் சர்ச்.. போலீஸ் தடியடி.. வைகோ கடும் கண்டனம்

சென்னையில் சிஎஸ்ஐ இம்மானுவேல் சர்ச்சின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் சிஎஸ்ஐ இம்மானுவேல் சர்ச்சின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு இருக்கிறது. இது அந்த பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள பல பழமையான சர்ச்சுகளில் அண்ணா நகர் சிஎஸ்ஐ இம்மானுவேல் சர்ச் முக்கியமான ஒன்று. இந்த சர்ச் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான சர்ச் ஆகும்.

இங்கு நிறைய கிருஸ்துவ மக்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சிஎஸ்ஐ கிருஸ்துவ மக்களின் முக்கியமான வழிபாட்டு தளங்களில் இதுவும் ஒன்றாகும்.

இடித்தனர்

இந்த நிலையில் அண்ணா நகர் சிஎஸ்ஐ இம்மானுவேல் சர்ச்சின் குறிப்பிட்ட பகுதி இன்று இடிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் சர்ச்சின் ஒரு பகுதியை இடித்தனர். சாலையின் ஒரு புறம் இருக்கும் பகுதியை இடித்து இருக்கிறார்கள். போலீஸ் பாதுகாப்புடன், புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது.

வழக்கு நடக்கிறது

வழக்கு நடக்கிறது

அண்ணாநகர் முதல் திருமங்கலம் வரை உள்ள 30 அடி சாலையை 60 அடி சாலையாக விரிவாக்கம் செய்ய அங்கு நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதற்காக அந்த சுவர் இடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. ஆனால் வழக்கு நடக்கும் போதே அனுமதியின்றி, முன்னறிவிப்பின்றி இந்த சுவர் இடிக்கப்பட்டது.

போலீஸ் தடியடி

போலீஸ் தடியடி

அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் போலீஸ் குவிக்கப்பட்டது. பொதுப்பணித்துறையினர், அங்கு சுவரை இடிக்கும் போது மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் போலீஸ் அங்கு இருந்த மக்களின் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வைகோ பார்வையிட்டார்

வைகோ பார்வையிட்டார்

இந்த நிலையில் அந்த பகுதியில் இடிக்கப்பட்ட ஆலயத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார். மேலும் தமிழக பொதுப்பணித்துறையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். தமிழக அரசு வழக்கு நடக்கும் போதே இந்த செயலில் ஈடுப்பட்டு இருக்க கூடாது என்று கண்டனம் தெரிவித்தார்,

English summary
Chennai: A portion of CSI Emmanuel Church in Anna Nagar was demolished by Tamil Nadu Public Works Dept earlier today. Priest Sam Raj Kumar says,"it's a 50-yr-old church. Madras HC was yet to announce judgement on its demolition but it was demolished without any prior information"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X