For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

களக்காட்டை கலக்கி வரும் 'குல்லா' குரங்கு.... பிடித்து 'பேக்கப்' செய்ய அலை மோதும் வனத்துறை!

Google Oneindia Tamil News

A rare monkey enters into Kalakkadu village…
களக்காடு: களக்காட்டில் ஊருக்குள் புகுந்த அரியவகை குரங்கு ஒன்றைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இங்குள்ள கரடி, மான்கள், சிறுத்தை, புலி, யானை போன்ற வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் படையெடுப்பது வழக்கம்.

அரிய வகை குல்லா குரங்கு:

இந்நிலையில் நேற்று பகல் களக்காடு - நாங்குநேரி ரோட்டில் அரிய வகை குரங்கு ஒன்று சுற்றி திரிந்தது. முகம் கறுப்பாகவும், தலையில் குல்லா வைத்தது போல் முடி அடர்ந்தும் காணப்பட்டது.

தாவிக் குதித்த குரங்கு:

அந்த பகுதியில் உள்ள மரங்கள், குடியிருப்பு பகுதிகளில் குரங்கு தாவித்தாவி ஓடியது. ரோட்டிலும் அங்கும், இங்கும் ஓடியது.

பொதுமக்கள் ஆர்வம்:

இந்த அரியவகை குரங்கை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

வழிதவறி ஊருக்குள் வருகை:

களக்காடு வனப்பகுதியில் இருந்து இரை தேடி வந்த போது ஊருக்குள் புகுந்த குரங்கு வழிதவறி ஊருக்குள்ளேயே சுற்றி திரிவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

தொந்தரவு கொடுக்காதீங்க:

இக்குரங்கு குறித்து வனச்சரகர் ராமசாமி இந்த குரங்கு அரிய வகை மந்தி இனத்தை சேர்ந்ததாக இருக்கலாம். அதனை பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு விட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அந்த குரங்கிற்கு எந்த தொந்தரவும் கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

அட்டகாடம் செய்யும் குரங்குகள்:

ஏற்கனவே ஊருக்குள் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால், குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்தி வரும் நிலையில் வனப்பகுதியில் உள்ள குரங்குகளும் ஊருக்குள் புகுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
A rare species of monkey entered into the forest village Kalakkadu. Forest rangers trying to catch that monkey and safely release it into forest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X