For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் அரசாங்கம் இருந்தால் தானே பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை விற்பனையை தடுக்க முடியும்!?

தமிழகத்தில் அரசாங்கம் இருந்தால் தானே பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை விற்பனையை தடுக்க முடியும்? என வாசகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அரசாங்கம் இருந்தால் தானே பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை விற்பனையை தடுக்க முடியும்? என நமது வாசகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து குருமூர்த்தி என்ற வாசகர் நம்மிடம் தெரிவித்துள்ள கருத்து:

A reader is asking that govt is running in Tamilnadu on the issue of Plastic rice

ஆந்திராவில் கர்நாடகாவில் அரசாங்கம் என்று செயல்படுகிறது அதனால் இந்த பிளாஸ்டிக் அரசி பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனை தெரிய வருகிறது. தமிழ் நாட்டில் எங்கே அரசாங்கம் நடக்கிறது இங்கே என்ன நடந்தாலும் கேட்பதற்கு யாருமில்லையே.

கடந்த சில தினங்களாக இந்த பிளாஸ்டிக் அரசி பற்றிய செய்திகள் காணொளிகள் வந்து கொண்டே இருக்கின்றன. உலகம் முழுவதும் அனைவரும் ஓடி ஓடி உழைப்பது இந்த ஒரு ஜான் வயிற்றுக்கு தான், ஆனால் இப்படி பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை போன்ற போலியானவற்றை உட்கொண்டால் ஒரு ஜான் இருக்க வேண்டிய வயிறு ஒன்பது ஜான் ஆகாமல் என்ன ஆகும்.

A reader is asking that govt is running in Tamilnadu on the issue of Plastic rice

பசிக்கு உண்ணும் உணவு கூட நிஜமானதா போலியானதா என்ற பயம் கலந்த உணர்வுடனே உண்ண வேண்டிய சூழ்நிலையில் நாம் தள்ளப்பட்டுள்ளோம். நடக்கும் எதையுமே கேட்பாரற்று கண்டுகொள்ள நடவடிக்கை எடுக்க நாதியில்லாத இந்தியாவில் இருக்கிறோம் என்பதால் இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டுமோ?

உலக கழிவுகளை கொட்டும் குப்பை கிடங்காக இந்தியா உள்ளது அது போதாதென்று உலக நாடுகளில் தயாரிக்கப்படும் போலி மருந்துகள் என அனைத்து போலியான பொருட்களும் புழங்கும் முதல் இடமாக இந்தியா உள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பது ஆயுதத்தால் வெடிகுண்டுகளால் துப்பாக்கி தோட்டாக்களால் உயிர்களை அழிப்பது மட்டுமல்ல, இப்படி போலியான பொருட்களை விற்று மக்களின் உயிரை அணு அணுவாக எடுப்பதும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தான் என்பதை அரசு ஏன் உணரவில்லை?

இப்படி மக்கள் உண்ணும் அனைத்தும் போலியானவைகள் என்றால் இதை தடுக்க வேண்டிய மத்திய மாநில அரசாங்கம் இருந்து என்ன பயன், அமெரிக்கா போன்ற உலக நாடுகளில் நுகர்வோர் அமைப்பில் புகார் வந்து நிரூபிக்கபட்டால் புகார் தந்தவருக்கு கோடி கணக்கில் இழப்பீடு கிடைக்கும்படி சட்டம் உள்ளது. ஆனால் இந்தியாவில் யார் இது போன்ற குற்றங்களில் ஈடு படுகிறார்களோ அவர்கள் கோடிகளை லஞ்சங்களாக கொடுத்து எளிதாக தப்பித்து வந்து விடுகிறார்கள்.

அதிகாரத்தில் இருப்பவர்களை ,ஆட்சியில் இருப்பவர்களை தான் கேள்வி கேட்கமுடியுமே தவிர ஆண்டு முடித்தவர்களையா கேள்வி கேட்க முடியும்? அரசாங்கத்தை குறை கூறினால் எதிர்த்தால் குண்டர் சட்டம் பாய்கிறது அவதூறு வழக்குகள் பாய்கிறது, பலருக்கு கண்மூடி தனமாக கோபம் வருகிறது.

நிதானமாக யோசித்து பாருங்கள் உள்ளதை சொன்னால் நடப்பதை சொன்னால் கோபப்படுவதில் என்ன நியாயம் உள்ளது. தவறுகள் நடந்தால் அதை திருத்திக்கொள்ள வேண்டுமே அது தான் மக்கள் நல அரசாங்கம், அரசியல் வாதிகளும் அங்கிகார வர்க்கத்தினரும் பயன்படுத்தும் அனைத்தும் தரமான பொருட்களாக இருக்கிறது,அடித்தட்டு நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் போலியானவையாக இருக்கிறது இது அரசாங்கத்திற்கு தெரியாதா என்ன?

இந்தியாவில் விற்கப்படும் போலியான பொருட்களினால் தினம் தினம் எத்தனையோ உயிர்கள் பலியாகின்றன ஆனால் உயிர் போக காரணம் இந்த போலியான பொருள்கள் தான் என்பது தெரிவதில்லை. இந்திய மக்கள் மீது அரசாங்கம் உண்மையான அக்கறை கொண்டிருந்தால் இந்தியாவில் விற்கப்படும் இறக்குமதி செய்யப்படும் போலியான அரசி சர்க்கரை போலி மருந்துகள் என அனைத்து போலியான பொருள்களையும் உடனடியாக கண்டுபிடித்து நிரந்திரமாக தடை செய்யாத வரையில் இங்கே உயிர் பலிகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.. இவ்வாறு அவர் தனது ஆதங்கத்தை கொட்டி நிரப்பி அனுப்பியுள்ளார்.

English summary
A reader has sent a lette to one india tamil.He has asked that In Tamil nadu govt is working? Andhra karnataka and govt is there for taking action on Plastic rice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X