For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்நாடு போலீசுக்கு ராயல் சல்யூட்!

By Shankar
Google Oneindia Tamil News

- பட்டுக்கோட்டை பிரபாகர்

ஒரு வார தீவிர புலனாய்வுக்குப் பிறகு ஸ்வாதியை கொலை செய்த ராம்குமாரை போலீஸ் கைது செய்துள்ளது.. போலீசின் மெத்தனம், அலட்சியம், பொறுப்பற்றத்தனம் என்று வசைபாடி கண்டிக்க உரிமை உள்ள நமக்கு போலீசின் உழைப்பு, புத்திக் கூர்மை, புலனாய்வுத் திறன் இவற்றைப் பாராட்டவும் கடமை உள்ளது.

A Royal salute to Tamil Nadu police

தனிப் படைகள் அமைத்து.. இரவு பகலாக தீவிரமாக உழைத்து.. ஒரே ஒரு வீடியோ காட்சியை வைத்துக் கொண்டு அத்தனை சாத்திய வழிகளிலும் இறங்கி.. அடையாள அட்டைகள் உள்ள பான் கார்ட், ஓட்டர்ஸ் கார்டு, ஆதார் கார்ட், டிரைவிங் லைசென்ஸ் என்று அத்தனை டேட்டா பேஸ்களிலும் தேடி..

A Royal salute to Tamil Nadu police

சூளைமேடு பகுதியில் உள்ள செல்போன் டவரில் கடைசியாக பிங் ஆன ஸ்வாதியின் செல்போன் சிக்னல் வைத்து லட்சக்கணக்கான மொபைல் அழைப்புகளை ஆராய்ந்து.... சூளைமேடு பகுதியில் வீடு வீடாக விசாரித்து ஒரு மேன்ஷன் காவலாளி மூலம் தலைமறைவான ராம்குமார் அடையாளம் காட்டப்பட்டு.. அவன் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தி.. அவன் செங்கோட்டை அருகில் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவன் என்பதைக் கண்டுபிடித்து.. அங்கு விரைந்து..அவனை மடக்கி.. தற்கொலைக்கு முயன்ற அவனை உயிருடன் பிடித்து..தன் காலரை நிமிர்த்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு போலீசுக்கு விரைப்பான ஒரு ராயல் சல்யூட்.

A Royal salute to Tamil Nadu police

ஒரே ஒரு கேள்வி: ஆக.. ஸ்காட்லாந்து யார்ட் போலீசுக்கு இணையான திறமையான புத்திசாலித்தனமான தமிழ்நாடு போலீஸ் நினைத்தால் எந்தக் குற்றத்திலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும்தானே? பல பிரபலமான கொலைகளில் வருடக் கணக்காக துப்பறிந்துகொண்டே டே டே.. இருப்பதால் இதையும் கேட்க வேண்டியதாயிருக்கிறது.

A Royal salute to Tamil Nadu police

ஒரு விஷயம் உண்மை என்று நிரூபனமாகிறது. அரசியல் தலையீடுகள் இல்லை என்றால் தமிழ்நாடு போலீசால் எந்த வழக்கையும் கண்டுபிடிக்க முடியும்!

English summary
Writer Pattukkottai Prabhakar respected Tamil Nadu police with a royal salute for arresting the murderer of Techie girl Swathy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X