ப்ளூவேல்.. பல ஆயிரம் பிஞ்சுகளின் உயிரை குடித்த டாஸ்க் மாஸ்டராக 17 வயது சிறுமி மாறியது எப்படி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ப்ளூவேல் கேம் விளையாட்டின் இறுதி கட்ட டாஸ்க்கான தற்கொலையில் இருந்து தப்பிக்கவே டாஸ்க் அட்மினாக மாறி மற்றவர்களின் உயிருடன் விளையாடியுள்ளார் இந்த 17 வயது சிறுமி.

ஆன்லைனில் விளையாடப்படும் ப்ளூவேல் சவால் விளையாட்டானது குலை நடுங்க வைக்கும் 50 டாஸ்க்களை ஆன்லைனில் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் கேமில் வெற்றி பெற முடியும் என்று மாணவர்கள், சிறுவர்கள் மூளை சலவை செய்யப்பட்டு விளையாடப்படுகிறார்கள்.

இந்த விளையாட்டை ரஷ்யாவை சேர்ந்த ஃபிலிப் புடேகின் என்பவர் உருவாக்கினார். இவர் ரஷ்யாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 தொடரும் உயிர்பலிகள்

தொடரும் உயிர்பலிகள்

விளையாட்டை உருவாக்கியவர் கைது செய்யப்பட்டபோதிலும் இந்த விளையாட்டு தொடர்ந்து விளையாடப்பட்டு பலரின் உயிரை குடித்து வருகிறது. இதுபோல் ரஷ்யாவை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் ப்ளூவேல் விளையாட்டை விளையாடத் தொடங்கினார்.

ப்ளூவேல் விளையாட்டுக்கு பலியான மதுரை மாணவன்- வீடியோ
 49 டாஸ்க்கள் நிறைவேற்றம்

49 டாஸ்க்கள் நிறைவேற்றம்

அட்மின் கொடுத்த 49 டாஸ்க்களையும் செய்து முடித்த அந்த சிறுமிக்கு கடைசி டாஸ்க்கான தற்கொலை செய்து கொள்வது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் உஷாரான அவர், தான் தற்கொலை செய்து கொள்ள விரும்பவில்லை என்றும் எனவே இந்த விளையாட்டின் அட்மினாக செயல்பட்டு இந்த நிகழ்ச்சியை முடித்து கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

 மரண குழு நிர்வாகி

மரண குழு நிர்வாகி

இந்த 17 வயது சிறுமி அட்மின் என்றதோடு மரணக் குழு நிர்வாகி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் பல்வேறு குழுக்களை உருவாக்கி ப்ளூவேல் சவால்கள் மூலம் பலரை ஈர்த்துள்ளார். 50 வகையான டாஸ்க்களையும் விளையாடும் குழுக்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.

மிரட்டல்

மிரட்டல்

இவ்வாறு உளவியலை கெடுக்கும் அளவுக்கு டாஸ்க்குகளை உருவாக்குவதுதான் இவரது பணி. இவரது கட்டளையின்படி யாராவது விளையாட மறுப்பு தெரிவித்தால் பெற்றோரையோ அல்லது உறவினர்களையோ கொன்று விடுவோம் என்று மிரட்டுவார். இதற்கு பயந்து எத்தனையோ பேர் தங்கள் இன்னுயிரை மாய்த்து கொண்டுள்ளனர்.

 சிறுமியின் சாமர்த்தியம்

சிறுமியின் சாமர்த்தியம்

தனது உயிரை பாதுகாத்து கொள்ள மிகவும் தந்திரமாக அட்மினாக செயல்பட்டு மற்றவர்களின் உயிருக்கு உலை வைத்த இந்த சிறுமியை என்னவென்று சொல்வது. மிகவும் கொடூர எண்ணத்துடன் கிரிமினல் எண்ணத்துடன் இவர் செய்த செயல்களால் எத்தனை பெற்றோர் இன்று பிள்ளைகளை இழந்து தவித்து வருகின்றனர் என்பதும் பிள்ளை பெற எத்தனை கஷ்டங்கள் பட வேண்டியது என்பதை தெரிந்து கொள்ளவும் இது அறியாத வயது. இந்த சிறுமிக்கு போலீஸார் உளவியல் ரீதியிலான கவுன்சலிங் கொடுக்க வேண்டும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Russian girl who was arrested for acting as admin in Blue Whale game wants to escape from suicide task while she was playing this game.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற