For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெற்றோர் திட்டியதால் செய்யாறு அரசு பள்ளியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

பெற்றோர்கள் திட்டியதால் செய்யாறு அரசு பள்ளியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

Google Oneindia Tamil News

செய்யாறு: பெற்றோர்கள் திட்டியதால் செய்யாறு அரசு பள்ளியில் மாணவன் தூக்கிட்டுதற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பெரிய விளையாட்டும் மைதானமும் விளையாட்டு மைதானத்தைச் சுற்றி மரங்களும் நிறைந்துள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளி மைதானத்துக்கு விளையாடச் சென்றவர்கள் அங்குள்ள மரத்தில் மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதை கண்டவர்கள். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த போலீஸார் மாணவனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

A student hanged at playground of government school in Cheyyar

விசாரணையில், செய்யாறு அருகே மாளிகைப்பட்டு கிராமத்தைச் ரஜினி என்பவரின் மகன் மதன்(17) என்பது தெரியவந்தது. இவர் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். மதனுக்கு அண்மையில் அவருடைய பெற்றோர் செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர்.

அந்த செல்போனை மதன் பெற்றோர்களுக்கு தெரியாமல் விற்பனை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, செல்போனை ஏன் விற்பனை செய்தாய் என்று மதனை அவருடைய பெற்றோர்கள் திட்டியுள்ளனர்.

பெற்றோர்கள் திட்டியதால் மாணவன் மதன்,மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். நேற்று பள்ளிக்கு வந்த மதன் பள்ளி முடிந்த பிறகு வீட்டுக்குச் செல்லாமல் பள்ளியைச் சுற்றியே இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து, பள்ளி விளையாட்டு மைதானத்தில் யாரும் இல்லாத இரவு நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதையடுத்து மாணவன் மதனின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் உடலைக் கைப்பற்றி செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பள்ளி மாணவன் மதன் பள்ளி விளையாட்டு மைதானத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

English summary
A student of government boys higher secondary school in Cheyyar Madhan hanged in school ground. he committed suicide for his parent shouting for sold cellphone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X