For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிலையை பார்த்தா ஜெயலலிதா மாதிரியே தெரியலையே! சோஷியல் மீடியாவில் ஹாட்

அதிமுக அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை அவரை போலவே இல்லை என கருத்து எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை திறப்பு- வீடியோ

    சென்னை: அதிமுக அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை அவரை போலவே இல்லை என கருத்து எழுந்துள்ளது.

    மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலை இன்று திறக்கப்பட்டது.

    இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

    அதிமுக பொதுச்செயலாளராக

    அதிமுக பொதுச்செயலாளராக

    தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவர் ஜெயலலிதா. அதிமுகவில் எம்ஜிஆரின் மறைவுக்குப்பின், பொதுச் செயலாளராக தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார்.

    இன்று ஜெ. பிறந்தநாள்

    இன்று ஜெ. பிறந்தநாள்

    கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் அதே ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினம், இன்று கொண்டாடப்படுகிறது.

    ஜெ. வெண்கல சிலை

    ஜெ. வெண்கல சிலை

    இந்த பிறந்த நாள் விழாவையொட்டி, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், எம்ஜிஆர் சிலைக்கு அருகில், ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    சமூகவலைதளங்களில் விவாதம்

    ஆனால் இந்த சிலை கொஞ்சமும் ஜெயலலிதா போல் இல்லை என சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் முகம் சிறியதாக இருப்பதாக கருத்து எழுந்துள்ளது.

    யாரோ போன்று

    சட்டசபையில் அண்மையில் திறக்கப்பட்ட ஜெ. படம் கையால் வரையப்பட்ட ஓவியம். அதில் இருந்த உயிரோட்டம் இந்த சிலையில் இல்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலை வேறு யாரையோ போல் உள்ளது என தெரிவிக்கின்றனர்.

    வளர்மதி சிலையா?

    என்னடா ஜெயலலிதாவுக்கு சிலை வைக்க சொன்னா வளர்மதிக்கு சிலை வைச்சு இருக்கீங்க என கேட்கிறார் இந்த வலைஞர்.

    English summary
    A talks going on Social media that the statue in not looks like Jayalalitha. Jayalalitha statue has opened in ADMK head office today on Jayalalitha's birthday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X