For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆசிரியர்கள் தாக்கியதில் மாணவன் படுகாயம்.. மருத்துவமனையில் அனுமதி!

கன்னியாகுமரி அருகே பதில் தெரியாத காரணத்திற்காக மாணவனை ஆசிரியர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: பதில் தெரியாத காரணத்திற்காக 10ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே அரசு மேல்நிலை பள்ளியில் கேள்விக்கு பதிலளிக்காத மாணவனை இரண்டு ஆசிரியர்கள் சேர்ந்து தாக்கியதில் காயமடைந்த மாணவன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

A teacher beaten student for not answering his question near kanniyakumari

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோட்டை அடுத்த வர்த்தக நாடார் குடியிருப்பு பகுதியை சார்ந்தவர்கள் விஜய் -சாந்தி தம்பதியர். இவர்களுடைய மகன் விக்னேஷ் என்பவர் கொடுப்பை குழி பகுதியில் உள்ள அரசு மேல் நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றான்.

நேற்றைய தினம் இவனிடம் ஆங்கில பாட ஆசிரியர் அருள் ஜோசப் என்பவர் கேள்வி ஒன்றினை கேட்டுள்ளார் அதற்கு மாணவன் விக்னேஷுக்கு பதில் தெரியாததால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அறிந்த பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் கேட்டதற்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று முன்னுக்கு பின்னாக ஆத்திரத்தில் பேசியுள்ளனர். மேலும் காயமடைந்த மாணவன் விக்னேஷ் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்ச்சை பெற்று வருகிறான். மாணவன் தாக்கபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A teacher beaten student for not answering his question near Kanniyakumari. The injured student have been admitted in the hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X