For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்... அதிர்ஷவசமாக உயிர் தப்பிய பயணிகள்

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருந்த வேன் தன் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதில் தடுப்பு சுவற்றில் அந்தரத்தில் தொங்கியது. இதனால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருந்த வேன் தன் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதில் தடுப்பு சுவற்றில் அந்தரத்தில் தொங்கியது. இதனால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை.

விருதுநகர் மாவட்டம், கல்லூரணியைச் சேர்ந்த 12 பேர் இன்று அதிகாலை ராமேஸ்வரத்துக்கு புறப்பட்டனர். அந்த வேனை அதே ஊரைச் சேர்ந்த அழகேசுவரன் (32) இயக்கினார்.

A van lost its control and hang in Pamban Bridge

சனிக்கிழமை அதிகாலை சுமார் 5.30 மணியளவில் பாம்பன் பாலத்தில் வேன் சென்றது. அப்போது அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. பாலத்தில் செல்லும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடத் தொடங்கியது.

இதனால் வேனில் இருந்தவர்கள் அலறினர். பின்னர் நேராக பாலத்தின் தடுப்புச் சுவரில் ஏறி வேனின் முன் சக்கரங்கள் மட்டும் அந்தரத்தில் தொங்கியது. தகவலறிந்த நெடுஞ்சாலை போலீஸார் விரைந்து சென்று அந்த 12 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

ஒருவேளை வேன் இன்னும் ஒரு அடி முன்னோக்கி சென்றிருந்தால் வேன் கடலுக்குள் விழுந்து பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம். பாம்பன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
A 12 members from Virudhunagar was going to Rameswaram in Van. While rain drizzling, the van enters into pamban bridge, it lost its control and hang on the wall of bridge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X