For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.ஜி.ஆர். இறுதி ஊர்வல ராணுவ வாகனத்தில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட ஜெ. வைரல் வீடியோ

சமூக வலைதளங்களில் ஜெயலலிதா தள்ளிவிடப்படும் வீடியோ காட்சி வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக ஷேர் செய்யப்பட்டது. எம்ஜிஆர் இறுதி ஊர்வல ராணுவ வாகனத்தில் இருந்து ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்படும் காட்சிதான் அந்த வீடியோவில் இருக்கிறது.

1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி அதிகாலை எம்ஜிஆர் மறைந்தார் என அறிவிக்கப்பட்டது. இதைக் கேள்விபட்ட ஜெயலலிதா உடனடியாக எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு போனார்.

விரட்டப்பட்ட ஜெ.

விரட்டப்பட்ட ஜெ.

ஆனால் ஜெயலலிதாவுக்கு அங்கு அனுமதி கிடைக்கவில்லை. அனைத்து கதவுகளும் ஜெயலலிதாவை விரட்டியடிப்பதிலேயே குறியாக இருந்தன.

21 மணிநேரம் நின்ற ஜெ

21 மணிநேரம் நின்ற ஜெ

எம்ஜிஆர் உடல் வைக்கப்பட்ட ராஜாஜி ஹாலில் அவரது தலைமாட்டிலேயே 21 மணிநேரம் ஜெயலலிதா 2 நாட்களாக நின்றிருந்தார் ஜெயலலிதா. எம்ஜிஆர் உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டபோது அதில் ஏற ஜெயலலிதாவும் முயற்சித்தார்.

ரோட்டில் தள்ளிவிடப்பட்ட ஜெ

ரோட்டில் தள்ளிவிடப்பட்ட ஜெ

ஆனால் ராணுவ வாகனத்தில் இருந்த எம்ஜிஆர் மனைவி ஜானகி அம்மாளின் உறவினர் நடிகர் தீபக் வேகமாக வந்து ஜெயலலிதாவின் கைகளை ராணுவ வாகனத்தில் இருந்து அகற்றி கீழே தள்ளிவிட்டார். ஜெயலலிதாவும் நடுரோட்டில் கீழே விழுந்தார். இச்சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

வைரலாகும் வீடியோ

இந்த காட்சிகள் உள்ள வீடியோதான் திடீரென தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

English summary
A Video goes viral on Jayalalitha pulled down in MGR Funeral A vidoe went viral on Jayalalithaa was pulled down in MGR's Funeral in 1987.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X