திருடர் குலத்துக்கே இவர் ஒரு கறை.. என்னா ஓட்டம் பாருங்க!.. இவரை சங்கத்துல இருந்து நீக்குங்க பாஸ்!
சென்னை: ஒரு நிறுவனத்தில் கொள்ளையடிக்கும் முயற்சியுடன் வந்த திருடனை பெண் ஒருவர் தலைதெறிக்க ஓடவிட்ட சம்பவம் நடந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கத்தி, துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. என்ன தான் பாதுகாப்புடன் இருந்தாலும் இந்த சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன.
இதுபோல் வெளிநாட்டில் ஒரு நிறுவனத்தில் திருடும் நோக்கத்துடன் ஒருவர் வருகிறார். அவர் அங்குள்ள வரவேற்பறையில் உள்ள பெண்ணிடம் ஏதோ கேட்பது போல் செல்கிறார்.
அப்போது திடீரென துப்பாக்கியை காட்ட அந்த பெண் பின்னோக்கி செல்கிறார். அப்போது அவரது துப்பாக்கி கீழே விழுந்து விடுகிறது. அதை எடுக்க திருடன் கேபினுக்குள் குதிக்கிறான்.
The worst robbery attempt ever..😄😄 pic.twitter.com/lQRENPfWGe
— Pramod Madhav (@madhavpramod1) September 9, 2018
இதையடுத்து மிகவும் சாமர்த்தியமாக அந்த பெண் துப்பாக்கியை காட்டி மிரட்டியவுடன் அந்த திருடன் பேண்ட் அவிழ்வதை கூட பொருட்படுத்தாமல் தலைதெறிக்க ஓடுகிறார். இது குறித்து வீடியோ வைரலாகி வருகிறது.