For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திராவிட, ஆரிய மொழிகள் என்றால் என்ன? என்ன வித்தியாசம் தெரியுமா? #ClassicallanguageTamil

இந்திய மொழிகள் பல்வேறு குடும்பங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை: நமது இந்திய நாட்டில் பேசப்படும் மொழிகள் திராவிட, ஆரிய மொழிகள் என்கிற பாகுபாட்டில் பிரித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்திய மொழிகளைப் பகுத்த ஐரோப்பிய அறிஞர்கள், ஆரியம், திராவிடம், முண்டா, மான்குமேர், திபெத்தோ சீனம் என்று ஐவகை மொழிகள் இந்தியாவில் இருப்பதாகக் கூறியுள்ளனார்.

எனினும் இந்திய மொழிகளைத் திராவிட மொழிகள் என்றும், ஆரியத் திராவிட மொழிகள் என்றும், ஆரிய மொழிகள் என்றும் மூவகையாகப் பாகுபாடு செய்தலே இன்று மொழியாராய்ச்சிக்குப் பொருந்துவதாக உள்ளது.

சீனமொழி பழமையானது

சீனமொழி பழமையானது

உலகில் உள்ள மற்ற மொழிகளை ஆராய்ந்தால், சீனமொழி மிகப் பழைமையானது. கொச்சின், சீனா, கம்போடியா முதலிய இடங்களில் உள்ள மொழிகள் அதனோடு உறவு உடையன. அவை அன்னாமியினம் எனப்படும். சயாம் நாட்டில் பேசப்படுவது தை மொழி எனப்படும். அதுவும் சீன மொழியோடு இயைந்ததே. பர்மிய மொழியும் திபெத் மொழியும் அதனோடு உறவு உடையனவே. ஐரோப்பாவில் பின்லண்டு முதல் கிழக்கே ரஷ்யா வரையில் வழங்கும் மொழிகள் சித்திய மொழிகள் எனப்படும்.

ஆரிய இன மொழிகள்

ஆரிய இன மொழிகள்

துருக்கியிலிருந்து ரஷ்யா வரையில் உள்ள நாடுகளில் வழங்கும் மொழிகள் துரானிய மொழிகள் எனப்படும். அவையும் இந்தச் சித்திய இனத்தைச் சார்ந்தனவே. ஆரியம் என்று சொல்லப்படுவன வடமொழியாகிய சமஸ்கிருதமும், அதைச் சார்ந்த வடஇந்திய மொழிகளும் மட்டும் அல்ல. கிரீக், இலத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், வெல்ஷ் முதலிய ஐரோப்பிய மொழிகள் பலவும் ஆரிய இனத்தைச் சார்ந்த மொழிகளே.

உலாப் மொழி இனம்

உலாப் மொழி இனம்

பாரசீகமும் அதைச் சார்ந்ததே. பாபிலோனிய மொழி, யூத மொழி, ஹீப்ரு மொழி, பினீசிய மொழி, அரபிமொழி, எகிப்துமொழி, அபிசீனிய மொழி, எத்தியோப்பிய மொழி முதலியவை செமிட்டிக் இனம் எனக் கூறப்படும். இவை அரேபியாவிலும் வட ஆப்பிரிக்காவிலும் வழங்குவன. பார்னு, பூலா, புஷ்மன் முதலிய மொழிகள் மத்திய ஆப்பிரிக்காவில் வழங்குவன உலாப் இனம் எனப்படும். ஜப்பான் மொழி தனிவகையானது.

பழங்குடிகளின் மொழி

பழங்குடிகளின் மொழி

ஐரோப்பாவில் ஸ்பெயினுக்கு வடக்கே வழங்கும் பாஸ்க் மொழியும் தனிவகையானது. எஸ்கிமோ பேச்சுக்களும் வேறு வகையானவை. அமெரிக்காவில் நாகரிகம் இல்லாத மக்கள் பேசிவந்த மொழிகள் வெவ்வேறு பெயரால் வழங்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்களின் மொழிகள் திராவிட மொழிகளோடு தொடர்பு உடையன என்று கருதிவந்தனர். போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. மலேயா, ஜாவா, பாலினேஷிய மொழிகள் வேறு வேறாக உள்ளன.

English summary
A View on Indian Languages. The Languages are Divided and kept under Serious Dynamics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X