For Daily Alerts
Just In
"ஆசிரியர் அடித்த அடிதான் என்னை புத்திசாலியாக்கியது”- கலாமின் வாழ்க்கையை விவரிக்கும் கார்ட்டூன்!
சென்னை: மறைந்த மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சிறு பிராய குழந்தைகளும் தெரிந்து கொள்ளும் வகையில் அழகான கார்ட்டூன் கதைகளாக தொகுத்துள்ளது ஒரு இணையதளம்.
குழந்தைகளுக்கு நற்பண்புகளை எடுத்துரைக்கும் வகையிலான கார்ட்டூன் சித்திரக்கதைகளை வெளியிட்டு வரும் இணையதளம் புக்பாக்ஸ்.காம்.
இந்நிலையில் மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவருடைய வாழ்க்கை வரலாற்றையும் குழந்தைகளுக்கும் புரியும் வகையில் அழகான சித்திரக் கதையாக வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் கலாமின் பள்ளி வாழ்க்கை, அவருடைய கல்லூரி வாழ்க்கை, விஞ்ஞானியாக அவர் ஆற்றிய பணிகள் ஆகியவை மிகவும் எளிமையாக குழந்தைகளுக்கு புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.