For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த வெறித்தனத்தை என்ன செய்யலாம் மக்களே?

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை உள்ளிட்டோருக்கு இரட்டை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சங்கர் ஆணவ கொலை வழக்கு : 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு- வீடியோ

    திருப்பூர்: நாட்டையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு இரட்டை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளைஞர் ஒருவர் சங்கர் கொலையை நியாயப்படுத்தியும் ஆணவக் கொலையை ஊக்குவித்தும் டிவிட்டரில் கருத்து பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 2015ம் ஆண்டு கல்லூரி மாணவியான கவுசல்யா, தலித் இளைஞர் சங்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையை ஏவி கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் சங்கரை நடுரோட்டில் வைத்து வெட்டினர்.

    இந்தக் கொடூர தாக்குதலில் சங்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கவுசல்யா ஆபத்தான கட்டத்தை தாண்டி உயிர் பிழைத்தார்.

     இரட்டை தூக்கு

    இரட்டை தூக்கு

    நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு இரட்டை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

     அபராதமும் விதிப்பு

    அபராதமும் விதிப்பு


    சின்னசாமி, ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் (எ) மதன் ஆகியோருக்கு நீதிபதி தூக்கு
    தண்டனை விதித்துள்ளார். கவுசல்யா தந்தை சின்னசாமிக்கு 2 மரண தண்டனை மற்றும் 10 ஆண்டு கடுங்காவல், 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

     தீர்ப்புக்கு வரவேற்பு

    தீர்ப்புக்கு வரவேற்பு

    திருப்பூர் நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கினார். இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

     மனசு தளராதிங்க

    மனசு தளராதிங்க

    இந்நிலையில் பொன்குமார் கொங்கு என்ற இளைஞர் இந்த கொலை குறித்தும் தீர்ப்பு குறித்தும் சர்ச்சைக்குறிய கருத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது " மக்களே இனியாவது இந்த கேமரா இல்லாத இடமா பாத்து செஞ்சு விடுங்க இப்ப பாருங்க கண்டவன்லாம் பேசறானுக . எப்படியோ செஞ்சது சந்தோஷம் தான் அது போதும் .என்ன போய் தண்டனை மனசு தளராதிங்க அடுத்த சம்பவத்துக்கு தயாராகுங்கள்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

     கொலையை ஊக்குவித்து

    கொலையை ஊக்குவித்து

    அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொலையை நியாயப்படுத்தியும் மனசு தளர கூடாது என ஆணவக் கொலைகளை ஊக்குவித்தும் அந்த இளைஞர் தனது பதில் தெரிவித்துள்ளார்.

    English summary
    A youth posted a controversy statement on twitter about sankar murder. He is encouraging murders like this in his tweet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X