For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை: சுஷ்மா தகவல்

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறினார்.

இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மட்டும்தான் ஆதார் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு வழங்கப்படுவது இல்லை.

Aadhaar card for NRIs: Sushma Swaraj

எனினும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டுமென்று பிரதமர் மோடி யோசனை தெரிவித்துள்ளார். இதன்படி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

இதற்கு முன்பு வரை வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினத்தை வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சகம் நடத்தி வந்தது. இப்போது அந்த அமைச்சகத்தை மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து இந்த நிகழ்ச்சியை வெளியுறவுத் துறை அமைச்சகம் நடத்தியது.

English summary
the government is considering giving Aadhaar cards to Non-Resident Indians and a decision on it will be taken soon, external affairs minister Sushma Swaraj said on Saturday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X