For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடோன்களில் இனி நேரடியாக பட்டாசு வாங்கவும் பான், ஆதார் அட்டை அவசியம்!

குடோன்களில் இருந்து நேரிடையாக பட்டாசு வாங்குபவர்கள் ஆதார் மற்றும் பான் எண் அவசியம் என்று பட்டாசு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஜிஎஸ்டி எண் இல்லாமல் குடோன்களில் இருந்து நேரிடையாக பட்டாசு வாங்குபவர்கள் ஆதார் மற்றும் பான் எண்ணை கட்டாயம் அளிக்க வேண்டும் என்று பட்டாசு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்படுகிறது. ஜிஎஸ்டி வரி கடந்த ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து விதமான பட்டாசு விற்பனைக்கும் ஜிஎஸ்டி எண் அவசியமாக்கப்பட்டுள்ளது.

Aadhar and PAN must for buying wholesale crackers

இதனால் பட்டாசு விற்பனை செய்யும் குடோன்களில் விற்பனையாளர்கள் ஜிஎஸ்டி எண் மூலம் பட்டாசுகளை வாங்கி அதனை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

ஆனால் சில வாடிக்கையாளர்கள் மொத்தமாக பட்டாசுகளை வாங்குவதற்காக நேரடியாக குடோன்களை அணுகின்றனர். ஆனால் அவர்களிடம் ஜிஎஸ்டி எண் இல்லாத காரணத்தினால் ஆதார் எண் மற்றும் பான் எண் பெறப்படுகிறது என்று பட்டாசு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் விற்பனையில் ஏற்படும் சிக்கல்கள் தீரும் என்றும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

English summary
After GST implemented for all types of crackers sale GST Number is important, Aadhar and PAN mandatory for crackers wholesale if not having GST number.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X