For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்வ வளம் தரும் ஆடி வெள்ளி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு சிறப்பான மாதம். ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் களை கட்டும். அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தினை வரவேற்பதுபோல் அம்மாதத்தின் முதல் நாளைப் பண்டிகையாக கொண்டாடுவது வழக்கம்.

ஆடிவெள்ளி அம்மனுக்கு சிறப்பான தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி முதல்நாளே வெள்ளிக்கிழமையன்று பிறக்கிறது. இது மிகவும் விஷேசமாகும். இந்த ஆண்டு, ஆடி மாதம் ஐந்து வெள்ளிக்கிழமைகள் வருகின்றன.

ஆடி மாதப் பிறப்பு

ஆடி மாதப் பிறப்பு

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன.

அம்மன் வழிபாடு

அம்மன் வழிபாடு

சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் அம்மனை நாடிச் சென்றவர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் கொடுக்கும் மாதமாகக் கருதப்படுகின்றது. காரணம் சந்திரன் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதாகும்.

புற்று கோயில்கள்

புற்று கோயில்கள்

ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியன்றும் புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று நாகருக்குப் பால் வார்த்துக் குலம் தழைக்க வேண்டுதல் செய்துகொள்ளலாம். முதல் வெள்ளியன்று இனிப்புத் தேங்காய் கொழுக்கட்டை, உப்பு, காரப் பருப்புக் கொழுக்கட்டை, எள்ளுக் கொழுக்கட்டை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.

அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கல்

அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கல்

இரண்டாம் வெள்ளியன்று பருப்புப் பாயசமும், உளுந்து வடையும் செய்து நிவேதிக்க வேண்டும். மூன்றாம் வெள்ளியன்று சர்க்கரைப் பொங்கல் செய்ய வேண்டும். நான்காம் வெள்ளியன்று ரவா கேசரி செய்து படைக்கலாம்.

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை

பொதுவாக ஐந்தாம் வெள்ளிக்கிழமை பால் பாயசம் செய்ய வேண்டும். ஆனால் அதே நாளன்று ஆடி அமாவாசையாக இருப்பதால் வெல்லமும் பருப்பும் கலந்த பாயசம்தான் செய்ய வேண்டும்.

செல்வ வளம் பெருகும்

செல்வ வளம் பெருகும்

ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும்.

English summary
July 17th is the 1st Friday of Aadi month. This is dedicated to Goddess Swarnambika. This Goddess is a form of Goddess Parvati. One who worships will be blessed with wealth and all the properties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X