For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மச்சான் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டாளா? #ஆடி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஆடி மாதத்தை வைத்து வரும் அட்ராசிட்டிகளுக்கு அளவேயில்லை. விடிய விடிய மட்டன் ஸ்டாலில் காத்திருந்து கறி எடுத்து வந்து சாப்பிட்டு ஆடியை கொண்டாடுவார்கள். புது மாப்பிள்ளைகளுக்கு ஆடின்னாலே மாமியார் வீட்டில் தனி கவனிப்புதான்.

தலை தீபாவளி போல தலை ஆடியும் உற்சாகமான பண்டிகைதான். ஆனால் விருந்துக்கு வந்து விட்டு மனைவியை மாமியார் வீட்டில் மனைவியை விட்டு விட்டு போக வேண்டுமே என்பதுதான் ஒரு கவலை.

ஆடி மாதம் கோவில்களில் திருவிழாதான் கூழ் ஊற்றுவது தொடங்கி தீ மிதிப்பது வரை களை கட்டும். கடை வீதிகளில் ஆடி தள்ளுபடி பர்சேஸ் செய்ய அலைமோதும். ஆடி மாதத்தை வைத்து டுவிட்டரில் பதிவுகள் அள்ளுகின்றன, அவற்றில் சில உங்களுக்காக.

ஆடி மாசம்லே

ஆடி மாதம்னாலே புதுமண தம்பதியரை பிரித்து விடுவார்கள். அதை மனதில் வைத்து ஒரு பதிவர்,
இன்னும் ஒரு மாசத்துக்கு நீங்க ரெண்டு பேரும் அன்னம் தண்ணி பொழங்க கூடாது இது #ஆடி மாசம்லே என்று பதிவிட்டுள்ளார்.

பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா மொமெண்ட்

ஆடி மாதம்தான் நண்பர்கள் எல்லாம் நினைவுக்கு வருவார்கள். வீட்டில் தனியா விட்டத்தை பார்த்து கொண்டு உட்கார்ந்திருக்கும் போது நண்பர்களுக்கு போன் செய்தால்... என்னடா... #ஆடி மாசம் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டாளா...?? என்று கேட்டு வெறுப்பேற்றுவார்கள். அதைத்தான் இந்த பதிவர் மீம்ஸ் ஆக போட்டுள்ளார்.

ஆழ்ந்த அனுதாபங்கள்

ஆடியில் மனைவியை பிரியும் கணவர் மார்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்று பதிவிட்டுள்ளார் இந்த பதிவர்.

எல்லாமே ஆடிதான்

ஆடி மாதத்தில் ஆடி காரில் போய் ஆடி நோம்பிக்கு துணி எடுக்கணும் என்று தனது ஆசையை பதிவிட்டுள்ளார் இந்த பதிவர்.

என்னா ஒரு சந்தோசம்

ஆடி மாதம் வந்தாலே என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்று ஜனகாராஜ் போல எத்தனை பேருக்கு சந்தோசம் தெரியுமா?

English summary
In some regions newly married couples stay separate during Aadi month. South Indians, marrying in the month of Aadi is considered inauspicious. Aadi hastag trend in Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X