For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பங்குனி உத்திரம் எதிரொலி.. ஆட்டு கிடா விற்பனை விர் விர்!

By Kmk Esakkirajan
Google Oneindia Tamil News

Recommended Video

    முருகன் ஆலயங்களில் பங்குனி உத்திரம் கோலாகலம்-வீடியோ

    நெல்லை: நெல்லை பகுதியில் பிரசித்த பெற்ற பங்குனி உத்திர விழா எதிரொலியாக ஆட்டு கிடா விற்பனை சூடுபிடித்துள்ளது.

    இந்துகளின் குல தெய்வ வழிபாட்டின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    aadu sales on high in nellai

    பங்குனி உத்தரத்தின் போது தங்கள் குல தெய்வத்திற்கு பக்தர்கள் கிடாய் வெட்டி வழிபடுவது வழக்கம். இதனை முன்னிட்டு மேலப்பாளயம் ஆட்டு சந்தையில் விற்பனை களை கட்டியுள்ளது. 2 - நாட்களாகவே அங்கு ஆடுகள் குவிக்கப்பட்டு வருகிறது. எடைக்கு ஏற்ப ஆடுகள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.7 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. 35 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.32 ஆயிரபத்திற்கு விலை போகிறது.

    சில கோயில் நிர்வாகிகள் மொத்தமாக வேனை வாடகைக்கு எடுத்து 10 முதல் 15 ஆடுகள் வரை வாங்கி சென்றனரர். இவற்றில் சில நிறக்குட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நிறக்கிடாய்கள் கூடுதலாக விலை வைத்து விற்கப்படுகிறது.

    இதுகுறித்து மேலப்பாளையம் சந்தை வியாபாரிகள் கூறுகையில், பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் செய்து கிடாய்களை கொண்டு வந்துள்ளோம். எதிர்பார்ப்புக்கு மாறாக விற்பனை இருப்பதால் வெளியிடங்களில் இருந்தும் கிடாய்களை கொண்டு வர ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    English summary
    Due to the Panguni Uthiram festival the sale of Aadu is high in Nellai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X