For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்வயலில் டிராக்டர் உழுத சர்ச்சை... ஆரணி டிஸ்பி ஜெரினா பேகம் சென்னைக்கு இடமாற்றம்!

ஆரணி அருகே நெல்வயலில் டிராக்டர் உழுத விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆரணி டிஎஸ்பி ஜெரினா பேகம் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    நெற்பயிர்களை அழித்து பெயரை கெடுத்துக் கொண்ட டிஎஸ்பி ஜெரினா..வீடியோ

    சென்னை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெண் நிலத்தகராறு காரணமாக பெண் விவசாயியின் பயிர் விளைந்திருந்த நெல் வயலை நபர் ஒருவர் டிராக்டர் கொண்டு உழுத விவகாரத்தில் டி.எஸ்.பி ஜெரினா பேகம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் டிஎஸ்பி ஜெரினா பேகம் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ஆரணியை அடுத்த காமக்கூர் கிராமத்தில் ஏற்பட்ட நிலத் தகராறை விசாரிக்கச் சென்ற டி.எஸ்.பி. ஜெரினா பேகம், கண் எதிரே பயிர் விளைந்திருந்த நெல் வயலை அத்துமீறி நபர் ஒருவர் டிராக்டரை இயக்கினர். இந்த செயலின் போது அங்கு விசாரணையில் இருந்த டிஎஸ்பி ஜெரினா பேகம் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின.

    Aarani DSP Regina Begum transferred to Chennai

    இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டதோடு, சம்பவ இடத்திலும், பாதிக்கப்பட்டவர்களிடமும் நேரில் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில், டிஎஸ்பி ஜெரினா பேகம் பணியிலிருந்தால் சாட்சிகளை கலைக்கவும், விசாரணைக்கு இடையூறு செய்ய வாய்ப்பிருப்பதால் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வேலூர் சரக காவல்துறை துணைதலைவர் வனிதாவுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் டி.எஸ்.பி. ஜெரினா பேகத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி வேலூர் சரக டி.ஐ.ஜி.வனிதா உத்தரவிட்டார். புதிய டிஎஸ்பியாக வேட்டவலம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த செந்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஆரணி டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெரினா பேகம் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் டிஜிபி ராஜேந்திரன் வெளியிட்ட பணியிட மாற்ற அறிவிப்பில் ஜெரினா பேகமும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

    English summary
    Arani DSP Jerina Begam who is forced to waiting list due to tractor digged the paddy infront of her and complaints raised against her that she didnot react to it. 2 days back DGP transferred her to Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X