For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களுடன் குத்தாட்டம் போட்ட எம்எல்ஏ... வனத்துறை அதிகாரியும் செம குத்து

கோவை மாவட்டம், தூமனூரில் மின்சாரம் கிடைத்த மகிழ்ச்சியில் ஆடிபாடிய ஆதிவாசி மக்களுடன் ஆறுக்குட்டி எம்எல்ஏவும் குத்தாட்டம் ஆடினார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

கோவை: கோவை மாவட்டத்தில் தூமனூரில் மின்சாரம் கிடைத்த மகிழ்ச்சியில் ஆடிபாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆதிவாசி மக்களுடன் ஆறுக்குட்டி எம்எல்ஏவும் குத்தாட்டம் ஆடி மகிழ்ந்தார்.

கோவை மாவட்டத்தில் ஆணைக்கட்டி மலை கிராமங்களில் ஒன்றான தூமனூர் என்ற மலைவாழ் கிராமம் உள்ளது. இங்கு நீண்ட ஆண்டுகளாக மின்சாரம் கிடையாது. இந்நிலையில் இங்கு முதல் முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டது.

Aarukutty MLA dances again with tribal people

இதையடுத்து மின் இணைப்பை துவக்கி வைக்க கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டி அந்த கிராமத்துக்கு சென்றார். அப்போது மின் இணைப்பு கிடைத்த மகிழ்ச்சியில் ஆதிவாசி மக்கள் ஆடி பாடி மகிழ்ந்தனர்.

பின்னர் ஆறுக்குட்டி எம்எல்ஏவும் நடனம் ஆடினார். அப்போது அங்கு வந்த வனத்துறை அதிகாரி ஒருவரும் நடனமாடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, ஓபிஎஸ் அணியில் இருந்த ஆறுக்குட்டி எம்எல்ஏ வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோதும் இதேபோல் அவர் நடனம் ஆடியது சமூகவலைதளங்களில் வைரலாகியது.

English summary
Goundampalayam MLA Aarukutty dances with tribal people in Anaikatti hill village Thoomanur which got power supply for first time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X