For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆவடியில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் - வீடியோ

சென்னை ஆவடி ராணுவ பயிற்சி மையத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரான ஆண்டிபட்டியில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தேனி: சென்னை ஆவடி ராணுவ பயிற்சி மையத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சிவசக்திவேலின் உடல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு கிராமத்தில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

சென்னை ஆவடி ராணுவ பீரங்கி தொழிற்சாலையில் பயிற்சியாளராக பணியாற்றி வந்த சிவகச்திவேல் என்ற ராணுவ வீரர், கடந்த 16ஆம் தேதி டி-72 என்ற ரஷ்ய பீரங்கியை பயிற்சிக்‍காக எடுத்து சென்றபோது பீரங்கியின் சிலிண்டரில் வாயு கசிந்ததால் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்‍குண்டு கிராமத்தில் ராணுவ மற்றும் அரசு மரியாதையுடன் இன்று அடக்‍கம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் திரு. ந. வெங்கடாசலம், மாவட்ட எஸ்பி. மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

English summary
A 37-year-old armyman Sivasakthivel was died on Wednesday after inhaling a noxious gas in a tank during a trial at the Heavy Vehicles Factory in Avadi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X