For Daily Alerts
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோர விபத்து: 4 பேர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர்: காடனேரி விலக்கு என்ற இடத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள காடனேரி விலக்கு என்ற இடத்தில் செங்கல் ஏற்றிச்சென்ற லாரி சரக்கு ஆட்டோவின் மீது மோதியது.

இதில் சரக்கு ஆட்டோவில் சென்ற தொழிலாளர்கள் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் நான்கு பேர் வத்திராயிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் விபத்துக்குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.