For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருமணம் செய்வதாக கூறி பலரை ஏமாற்றிய நடிகை ஸ்ருதி - குண்டர் சட்டத்தில் கைது

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    திருமணம் செய்வதாக கூறி பலரை ஏமாற்றிய நடிகை ஸ்ருதி - வீடியோ

    கோவை: திருமணம் செய்வதாக கூறி பலரை ஏமாற்றிய ஸ்ருதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஸ்ருதி தாய் சித்ரா மற்றும் தந்தை பிரசன்னா வெங்கடேஷ் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

    ஆடி போனால் ஆவணி என்ற படத்தில் நடித்த புதுமுக நடிகையாக நடித்தவர் ஸ்ருதி. கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர். வெளிநாட்டில் வேலை செய்யும் இளைஞர்களை குறிவைத்து பண மோசடி செய்துள்ளனர்.

    மென்பொறியாளர் சந்தோஷ்குமாரை திருமணம் செய்வதாக கூறி ரூ.43 லட்சம் மோசடி செய்த வழக்கில் நடிகை ஸ்ருதி கைது செய்யப்பட்டார்.

    நடிகை ஸ்ருதி மீது வழக்குப் பதிவு

    நடிகை ஸ்ருதி மீது வழக்குப் பதிவு

    திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.41 லட்சம் மோசடி செய்ததாக சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கொடுத்த புகாரின் பெரில் நடிகை ஸ்ருதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜெர்மனி நாட்டில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வரும் பாலமுருகன் என்பவர், திருமண தகவல் இணையதளத்தில் ஸ்ருதியின் போட்டோவைப் பார்த்து திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

    ரூ. 41 லட்சம் மோசடி

    ரூ. 41 லட்சம் மோசடி

    ஃபேஸ்புக்கில் கவர்ச்சியான புகைப்படத்தை போட்டு பலரையும் கவர்ந்தார் ஸ்ருதி. பாலமுருகனை திருமணம் செய்வதாக ஆசைகாட்டி 41 லட்சம் மோசடி செய்து விட்டார். இதுதொடர்பாக பாலமுருகன் சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    3 ஆண்டுகளாக மோசடி

    3 ஆண்டுகளாக மோசடி

    புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் ஸ்ருதி, அவரது தாய் சித்ரா, தம்பி சுபாஷ், வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர்.கடந்த ஒரு வாரமாக இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில், 3 ஆண்டுகளாக அவரை பலரை மோசடி செய்துள்ளார்.

    தில்லாலங்கடி ஸ்ருதி

    தில்லாலங்கடி ஸ்ருதி

    திருமணம் செய்வதாக ஆசை காட்டி ஸ்ருதி மோசடியாக பெற்ற பணத்தில் 15.50 லட்சத்திற்கு 62 பவுன் நகை, டைமண்ட் ரூபி பதித்த தங்க நகைகள் வாங்கியுள்ளார். மேலும் மியூச்சுவல் பண்டில் 5.50 லட்சம் முதலீடு, 1.32 லட்சம் விமான செலவு, ஓட்டல் செலவு போன்றவற்றுக்கு செலவழித்துள்ளார்.

    பலரிடம் மோசடி

    பலரிடம் மோசடி

    லண்டன் உட்பட பல்வேறு வெளிநாட்டு நகரங்களில் டான்ஸ் பயிற்சி, படிப்புகளையும் ஆடம்பரமாக செலவு செய்து படித்துள்ளார். ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் என ஒரே நேரத்தில் பலருடன் பேசியுள்ளார். செல்போன், சிம்கார்டுகளை வாங்கியுள்ளார்.

    மோசடி பணத்தில் சொசுகு வாழ்க்கை

    மோசடி பணத்தில் சொசுகு வாழ்க்கை

    மேலும், ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் ஒரு வருட பவுண்டேசன் சான்றிதழ் படிப்பிற்காக கடந்த ஆண்டில் 10 லட்சம் செலுத்தியுள்ளார். அதேபல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பிற்காக 35 லட்சம் செலுத்தியுள்ளார். 3 ஆண்டிற்கும் மேலாக இப்படி ஏமாற்றியே சொகுசு வாழ்க்கை நடத்தியுள்ளார்.

    ஜெயிலில் ஸ்ருதி

    ஜெயிலில் ஸ்ருதி

    ஸ்ருதி பலரிடமும் இதேபோல், மோசடி செய்துள்ளதும், பணத்தை திருப்பி கேட்கும் பலரையும் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்வதாக மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகை ஸ்ருதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அவரது தாய் சித்ரா, தந்தை பிரசன்ன வெங்கடேஷ் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

    English summary
    The Coimbatore police have invoked provisions of Goondas Act to detain Conwoman Sruthi. She arrested recently along with her parents for cheating an NRI to the tune of Rs 41 lakh.The actress Sruthi allegedly concealed her original identity and allured the man for marriage.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X