For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எச். ராஜா மீது தேவைப்பட்டால் நடவடிக்கை.. என்ன சொல்ல வருகிறார் அமைச்சர்?

எச் ராஜா மீது சட்ட ரீதியான நடவடிக்கையை தேவைப்படும் போது போலீசார் எடுப்பார்கள் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

மதுரை: எச் ராஜா மீது சட்ட ரீதியான நடவடிக்கையை தேவைப்படும் போது போலீசார் எடுப்பார்கள் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எச் ராஜா உயர்நீதிமன்றத்தையும் போலீசாரையும் தகாத வார்த்தைகளால் விமர்சித்தார்.

அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோவும் வைரலானது. இதையடுத்து திருமயம் காவல்துறையினர் எச் ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அமைச்சர் ஆர்பி உதயக்குமார்

அமைச்சர் ஆர்பி உதயக்குமார்

இதனால் அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் எச் ராஜா மீது சட்ட ரீதியான நடவடிக்கையை தேவைப்படும் போது போலீசார் எடுப்பார்கள் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

வெற்றி பெறுவோம்

வெற்றி பெறுவோம்

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை என்றும் இடைத் தேர்தல் நடந்தால் 1லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது லட்சியம் என்றும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார்.

தேவைப்படும் போது

தேவைப்படும் போது

இடைத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து முதல்வரும் துணை முதல்வரும் வகுத்து கொடுத்த யூகத்தின் படி நடந்து வெற்றி பெறுவோம் என்றார். மேலும் எச் ராஜா மீது சட்ட ரீதியான நடவடிக்கை தேவைப்படும் போது போலீசார் எடுப்பார்கள் என்றும் அமைச்சர் உதயகுமார் கூறினார்.

வேறு எப்போது?

வேறு எப்போது?

எச் ராஜா வெட்டவெளியில் நீதித்துறையையும் காவல்துறையையும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால் தேவைப்படும்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் அமைச்சர். இப்போது இல்லாமல் வேறு எப்போது நடவடிக்கை தேவைப்படும்?

எஸ்கேப்பான எஸ்வி சேகர்

எஸ்கேப்பான எஸ்வி சேகர்

இதுபோலத்தான் தமிழக பாஜக மூத்த நிர்வாகியான எஸ்வி சேகர் பெண் செய்தியாளர் குறித்து அவதூறாக பேசிவிட்டு மாதக்கணக்கில் சட்டையில் தேசிய கொடியை குத்திக்கொண்டு எஸ்கேப்பாகி வந்தார். அவரை போலவே எச் ராஜாவும் எஸ்கேப்பாக நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தருவது போல் உள்ளது அமைச்சர் உதயக்குமாரின் பேச்சு.

English summary
Minister Udhayakumar has said Action will be taken on H Raja when its need.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X