For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காமெடி நடிகர் 'அல்வா' வாசு மறைந்தார்

காமெடி நடிகர் 'அல்வா' வாசுவின் உடல்நிலை சில மாதங்களாக மோசமாக இருந்த நிலையில் நேற்று காலமானார்.

By Vignesh
Google Oneindia Tamil News

Recommended Video

    காமெடி நடிகர் அல்வா வாசு காலமானார்-வீடியோ

    மதுரை : காமெடி நடிகர் 'அல்வா' வாசுவின் உடல்நிலை சில மாதங்களாக மோசமாக இருந்த நிலையில் நேற்று காலமானார். அவரது இயற்பெயர் வாசு. அவருக்கு வயது 57.

    'அமைதிப்படை' படத்தில் சத்யராஜுக்கு அல்வா வாங்கிக் கொடுக்கும் கேரக்டரில் நடித்து, அதன்மூலம் 'அல்வா' வாசு எனப் பிரபலமானவர் நடிகர் வாசு. இவர், வடிவேலுடன் சேர்ந்து பல படங்களில் காமெடி செய்து நம்மைச் சிரிக்கவைத்தவர்.

    ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த வாசு சிறுவயதிலேயே சிரமங்களை எதிர்கொண்டு வாழப் பழகிக்கொண்டவர். படிப்பிலும் படு கெட்டி. சிறுவயது முதலே இசை ஆர்வம் கொண்டவர். இசையின் மீதுகொண்ட பேரார்வத்தினால் கிடார் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.காம் படிக்கும் காலத்தில் இசையால் கல்லூரிக்கே தெரிந்தவராக இருந்திருக்கிறார்.

    இசையமைப்பாளர் கனவு :

    இசையமைப்பாளர் கனவு :

    'மியூசிக் நல்லா வருதே.. நீ ஏன் மியூசிக் டைரக்டர் ஆகக்கூடாது..' என நண்பர்கள் சொல்ல, அதே எண்ணத்தோடு இருந்தவர். கல்லூரிப் படிப்பு முடிந்ததும், எந்தச் சினிமா பின்புலமும் இல்லாமல் சென்னைக்கு வண்டியேறினார். சென்னைக்கு வந்து இசையமைப்பாளர் வாய்ப்புக் கேட்டவரை திரையுலகம் விரட்டாத குறையாக வினோதமாகப் பார்த்தது.

    ஸ்டூடியோ, தயாரிப்பு அலுவலகம் என ஏறி இறங்கிய இவருக்குச் சினிமா இசையில் கூட்டத்தோடு கூட்டமாக கிடார் வாசிக்கக் கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவரது கனவைச் சிதைக்கும் அத்தனை வார்த்தைகளையும் காதாரக் கேட்டவர். அப்படியும் பின்வாங்கவில்லை.

    மணிவண்ணனிடம் உதவி இயக்குநர் :

    மணிவண்ணனிடம் உதவி இயக்குநர் :

    கதை எழுதும் திறமையும் வாசுவிடம் இருந்ததால் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். அப்போது முதல் இசையமைப்பாளர் கனவோடு, இயக்குநர் கனவும் சேர்ந்தது. மணிவண்ணன் படங்களுக்காக வேலை பார்த்தார். வாசு இல்லாமல் இயக்குனர் மணிவண்ணன் சாப்பிடுவது கூட இல்லை என்கிற அளவிற்கு அவர் மீது பாசம் காட்டினார். மணிவண்ணனுக்கு ஷூட்டிங்கில் வாசு தான் எல்லாம். அவர் சொல்வது தான் நடக்கும். யாரும் வாசுவைக் கண்டிக்க முடியாது.

    மணிவண்ணனிடம் பணியாற்றிய சுந்தர்.சி. போன்றோர் பெரிய இயக்குனர்கள் ஆகிவிட, இவர் தொழிலில் கவனம் செலுத்தாமல் இயக்குனருக்கு செல்லப் பிள்ளையாக மட்டுமே இருந்தார்.

    திரையில் முகம் :

    திரையில் முகம் :

    ‘வண்டிச்சக்கரம்' என்ற படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்க, முதல்முறையாக வெள்ளித்திரையில் தலையைக் காட்டினார் வாசு. அடுத்து ‘அமைதிப்படை' படத்தில் உதவி இயக்குநராக இருந்து அதில் நடிக்கவும் செய்தார். அதில் ஹீரோ சத்யராஜுக்கு அல்வா வாங்கிக் கொடுப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும். அந்தக் காட்சியால் ‘வாசு' என்ற பெயருக்கு முன்னால் ‘அல்வா' வந்து ஒட்டிக்கொண்டது. அப்போது முதல் சினிமா துறையில் ‘அல்வா' வாசு என்றே அழைக்கப்பட்டார்.

    பொருளாதாரச் சூழல் :

    பொருளாதாரச் சூழல் :

    மணிவண்ணன் இயக்கிய படங்களுக்கு காமெடி ஸ்க்ரிப்ட் எழுதினார். தனியே கதைகள் எழுதியும் தயாரிப்பாளர்களிடம் முயற்சித்துப் பார்த்தார். ஆனாலும், ஏமாற்றமே மிஞ்சியது. பொருளாதாரச் சூழலால் சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

    வடிவேலுடன் நட்பு :

    வடிவேலுடன் நட்பு :

    காமெடியனாக நடித்ததன் மூலம் வடிவேலுடன் அறிமுகம் கிடைத்தது. வடிவேலு உருவாக்கிய காமெடி டீமில் அல்வா வாசு சேர்ந்தார். ஐந்து வருடங்களுக்கும் மேல் தொடர்ச்சியாக நடித்துப் பட்டையைக் கிளப்பினார் வாசு.

    இப்படி, 900 படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாப்பாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். நகைச்சுவை நடிகர் வடிவேலுடன் இவர் நடித்த காட்சிகள் மிகவும் பிரபலமானவை.

    English summary
    Actor Alwa vasu is passed away. He acts more than 900 movies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X