For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அருண்விஜயை ஆட்டுவித்தது சுவாதியின் ஆவியா? பரபரப்பு கிளப்பும் வலைஞர்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் அருண்விஜய் மதுபோதையில் காரை ஓட்டி போலீசார் ஜீப்பின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதற்கு சுவாதியின் ஆவிதான் காரணம் என சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது. அதே நேரத்தில் அருண் விஜய் குடித்து விட்டு கார் ஓட்டியதற்கும் சுவாதி ஆவிக்கும் என்ன சம்பந்தம் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் திருமண விழாவுக்கான விருந்து நடந்தது. இதில் பல்வேறு துறை பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

இந்த விருந்தில் தன் மனைவியோடு கலந்து கொண்டார் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய். குடி போதையில் வீடு திரும்பியபோது நுங்கம்பாக்கம் காவல் நிலையம் எதிரில் பிளாட்பாரத்தில் ஏற்றி நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வேனில் அருண் விஜய்யின் கார் வேகமாக மோதி நின்றது.

மோதிய வேகம் மித மிஞ்சிய வேகம் என்ற போதிலும் காரில் இருந்த பாதுகாப்பு சாதனங்களால் அவர் காயங்களின்றி தப்பினார் என்றபோதிலும் காவல்துறை வாகனம் பலத்த சேதமடைந்தது. அருண் விஜய் சென்ற காரும் சேதமடைந்தது.

அதிகாலை மூன்றரை மணிக்கு நடந்த இந்த விபத்து, காவல் நிலையத்தின் எதிரில் நடந்ததால் காவல்துறையினர் உடனடியாக வந்து விட்டனர். அடுத்த பதினைந்து நிமிடங்களில் நடிகர் விஜயகுமாரும் அருண் விஜய்யின் நண்பர்களும் சில கார்களில் வந்துவிட, மோதி சேதத்தை ஏற்படுத்திய காரில் இருந்து இறங்கிய அருண் விஜய்யின் மனைவி இன்னொரு காரில் ஏறி அமர்ந்துவிட்டார்.

போக்குவரத்து காவலர்கள் போதை அளவை அளவிட பயன்படுத்தப்படும் கருவியைக் கொண்டு சோதிக்க, அவரது உடலில் 56% ஆல்கஹால் இருந்துள்ளது. இந்த பரிசோதனை, விபத்து நடந்த இடம், வாகனம் என அனைத்தும் போலீஸாரால் வீடியோ பதிவாக எடுக்கப்பட்டுள்ளது.

அருண் விஜய்யின் அப்பா விஜயகுமார் நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஸ்டேஷனுக்குச் சென்று உதவி ஆணையரைச் சந்தித்து அரைமணி நேரம் பேசியிருக்கிறார். பின்னர் வெளியில் வந்தவர் மகனை அழைத்து கொண்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.

ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து சென்னை கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை விசாரிக்கவே, பதற்றமடைந்த காவல்துறையினர் உடனடியாக நடிகர் விஜயகுமார் வீட்டுக்குச் சென்று அருண் விஜய்யை ஒப்படைக்குமாறு கூறினர்.

ஆனால் அருண் விஜய் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்பதை அறிந்த விஜயகுமாரும், அருண் விஜய்யும் இன்று செயிண்ட் தாமஸ் மவுண்ட்டில் இருக்கும் போக்குவரத்து காவல்துறை அலுவலகத்தில் ஆஜராவதாகக் கூறியிருக்கிறார்கள்.

இன்று மோதிய வாகனத்தையும், மோதலுக்குள்ளான வாகனத்தையும் ஆர்.டி.ஓ சோதனை செய்து, அருண் விஜய்யின் வாகனத்தின் வேகம் பற்றி சான்றிதழ் அளிப்பார். இன்று சென்னை போக்குவரத்து காவல்துறையிடம் அருண் விஜய் வரும்பட்சத்தில் அவர் மீது மோட்டார் வாகனச் சட்டம் 185ஆவது பிரிவு மற்றும் இந்திய தண்டனைச்சட்டம் 279ஆவது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். வழக்குப் பதிந்தால் அவர் கைது செய்யப்படுவார்.

இந்த விபத்தைப் பொருத்தவரை உயிர்ச்சேதம் எதுவும் இல்லாத நிலையில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தும்போது ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், இந்தியாவில் கடுமையாகி உள்ள சாலை போக்குவரத்து விதிகள் மது போதையில் வாகனம் ஓட்டுவதைக் கடுமையான குற்றமாகக் கருதுகிறது. அதனால் அவர் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்றே தெரிகிறது.


இந்நிலையில், அருண்விஜய்யின் கார் மோதிய போலீசார் வாகனம், சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரை செங்கோட்டையில் இருந்து அழைத்து சென்ற வாகனம் என்று சமூகவலைதளங்களில் பரவிவருகிறது. மேலும் அருண் விஜயின் உடலுக்குள் புகுந்த சுவாதியின் ஆவி, போலீசாரின் வாகனத்தை இடிக்க செய்ததாகவும் சிலர் சமூகவலைத்தளங்களில் கட்டு கதைகளை பரப்பிவருகின்றனர்.

சுவாதி வழக்கை மக்கள் நினைவில் வைத்திருக்கத்தான், ஆவி அப்படி செய்ததாகவும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். ஏற்கனவே சுவாதியின் ஆவி நுங்கம்பாக்கம் அருகில் சுற்றி திரிவதாக சிலர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அருண்விஜயையும் சுவாதியின் ஆவிதா ன் ஆட்டுவித்து போலீசார் வாகனம் மீது இடிக்க வைத்தது என பொய்யான தகவல்களை சில நெட்டிசங்கள் சமூக வலைதளங்களில் பரப்பிவருகின்றனர்.

English summary
Social media persons creates Swathi ghost made actor Arun Vijay hit Police Van.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X