For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவாஜிகணேசன் மணி மண்டபம் திறப்பு விழாவில் ஓபிஎஸ்ஸை தவிர்த்தாரா கமல்?

சிவாஜி கணேசன் மணி மண்டபம் திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை நடிகர் கமல்ஹாசன் தவிர்த்ததாக ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணி மண்டபம் திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நடிகர் கமல்ஹாசன் தவிர்த்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

சென்னை அடையாறில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணி மண்டபம் இன்று திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ மற்றும் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிவாஜி மணி மண்டபம் திறப்பு

சிவாஜி மணி மண்டபம் திறப்பு

நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் வருவதற்கு முன்னரே மணி மண்டபம் திறக்கப்பட்டது. பின்னர் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்தை அமைச்சர் ஜெயக்குமார் மேடைக்கு அழைத்தார்.

ஜெயக்குமார் அழைப்பை நிராகரித்தாரா கமல்?

ஜெயக்குமார் அழைப்பை நிராகரித்தாரா கமல்?

அப்போது துணை முதல்வர் ஓபிஎஸ் அருகே கமல்ஹாசனை உட்காருமாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். ஆனால் இதை நிராகரித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் அருகே கமல்ஹாசன் அமர்ந்தார்.

ரஜினிக்கு பொன்னாடை போர்த்திய ஓபிஎஸ்

ரஜினிக்கு பொன்னாடை போர்த்திய ஓபிஎஸ்

துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை நடிகர் கமல்ஹாசன் திட்டமிட்டே தவிர்த்ததாகவே புரிந்து கொள்ளப்பட்டது. பின்னர் ரஜினிகாந்துக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் பொன்னாடை போர்த்தினார்.

ஜாலியாகப் பேசிய ஜெயக்குமார்

ஜாலியாகப் பேசிய ஜெயக்குமார்

ஆனால் கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார்தான் பொன்னாடை போர்த்தினார். இத்தனைக்கும் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து வந்தவர் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால் அதே ஜெயக்குமார் இன்று ஜாலியாக கமல்ஹாசனுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியது கலகலப்பை ஏற்படுத்தியது.

English summary
According to the sources Actor Kamal Haasan today avoid to share stage with Deputy Chief Minister O Panneerselvam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X