For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தகடூர் கோபி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்

கணினியில், தமிழ் எழுத்துருக்கள் மற்றும் மாற்றிகளை உருவாக்கி தந்தவர்களில் ஒருவரான தகடூர் கோபியின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கணினியில், தமிழ் எழுத்துருக்கள் மற்றும் மாற்றிகளை உருவாக்கி தந்தவர்களில் ஒருவரான தகடூர் கோபியின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டையைச் சேர்ந்தவர் தகடூர் கோபி. 42 வயதான இவர் கணினி பொறியியல் பட்டம் படித்தவர்.

Actor Kamal haasan condoles the demise of Thakadur Gobi

சிங்கப்பூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில், மென்பொருள் துறையில் பணியாற்றினார். இணைய உலகில், அதியமான் கோபி, தகடூர் கோபி, ஹைகோபி போன்ற பெயர்களில், தளங்களை உருவாக்கி, அதியமான் மாற்றி, தகடூர் தமிழ் மாற்றி ஆகிய எழுத்துரு மாற்றிகளை வெளியிட்டுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென் மாநில மொழிகளிலும் எழுத்துரு மாற்றிகளை உருவாக்கியுள்ளார் தகடூர் கோபி. இவர் கடந்த 28ஆம் தேதி அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார்.

அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் குமாரசாமிப்பேட்டைக் குமாரன் தகடூர் கோபியை நவீனக் கணினி யுக உலகத் தமிழ் சமுதாயம் வணங்குகிறது. அவர் தமிழர்க்கு அளித்த கொடையை மறவோம். தமிழ் தாய்க்கு இது போல் குழந்தைகள் இனியும் பிறக்கும் ,பிறக்க வேண்டுமென்பதே நம் அவா. குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

English summary
Actor Kamal haasan condoles the demise of Thakadur Gobi, one of those who created Tamil fonts and converters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X