அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் சேருக... கமல் திடீர் அழைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  'அகில இந்திய விவசாயிகள் கட்சி'.. வந்து சேருங்கள்.. கமல் திடீர் அழைப்பு!..வீடியோ

  சென்னை: அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் இதுவரை சேராதவர்கள் வந்து சேருமாறு நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

  நடிகர் கமல்ஹாசன் அண்மைக் காலமாக அரசியல் ரீதியிலான டிவிட்டுகளை வெளியிட்டு வருகிறார். டிவிட்டர் வாயிலாக அரசுகளையும் அரசியல் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

  அண்மையில் ரசிகர்களை சந்தித்தப்போதும் அரசியல் தொடர்பான அனல்பறக்கும் கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். நடிகர் கமல்ஹாசனை தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அவ்வப்போது சந்தித்து வருகின்றனர்.

  அகில இந்திய விவசாயிகள் குழு

  இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதாவது அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

  முக்கியமான மக்கள் குரல்

  முக்கியமான மக்கள் குரல்

  மேலும் "இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல்" என்றும் கமல் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

  மதத்தைக் கடந்து..

  மதத்தைக் கடந்து..

  அத்துடன், பசிக்கு மதமில்லை, பசிக்கு பதில் விவசாயமும்தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம் என்றும் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

  பழைய ட்வீட்

  பழைய ட்வீட்

  முன்னதாக அகில இந்திய விவசாயிகள் கட்சி, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி என கமல்ஹாசன் பதிவிட்டிருந்தார். இதனால் கமல்ஹாசனின் புதிய கட்சியா இது என்கிற பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actor Kamalhaasan invites public to join in All india farmers party. He mention this in his twitter page.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற