For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரே வாரத்தில் உடைந்தது கார்த்திக்கின் விடியல் கூட்டணி! சிங்க கூட்டணிக்கு சிட்டாய் பறந்த சேதுராமன்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் கார்த்திக் தலைமையில் 4 கட்சிகள் இணைந்து விடியல் கூட்டணி என்ற புதிய அணி உதயமாகியிருந்த நிலையில், ஒரே வாரத்தில் அக்கூட்டணி உடைந்து, அதிலிருந்து ஒரு கட்சி சிங்க கூட்டணிக்கு தாவிவிட்டது.

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி இடம்பெறும் எனக் கூறப்பட்டது. ஆனால் கார்த்திக் கட்சியை கூட்டணியில் திமுக சேர்க்கவில்லை.

இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக கார்த்திக் ஆலோசனை நடத்தினார். முக்குலத்தோர் வாக்குகளை பெறுவதற்காக கார்த்திக் திட்டம் வகுத்தார்.

விடியல் உதயம்

விடியல் உதயம்

இதையடுத்து, நாடாளும் மக்கள் கட்சி, டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னணி, மக்கள் மாநாடு கட்சி மற்றும் தமிழ் மக்கள் கட்சி ஆகியவை இணைந்து "விடியல் கூட்டணி" என்ற பெயரில் புதிய கூட்டணியை கார்த்தி உருவாக்கினார்.

கடந்த வாரம்

கடந்த வாரம்

சென்னையில் கடந்த 15ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்திக், கூட்டணிக்காக நாங்கள் காத்திருந்த போது பெரிய கட்சிகள் தங்களுடைய சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றார்கள். அதை ஏற்க முடியாத நிலையில்தான் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளோம் என்று கூறினார்.

ஒரே வாரத்தில்

ஒரே வாரத்தில்

இக்கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகி முழுதாக, ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், விடியல் கூட்டணியில் ஓட்டை விழுந்துள்ளது. ஆம், அக்கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கழன்றுவிட்டது.

சிங்கம்

சிங்கம்

பார்வேர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளர் கதிரவன் எம்.எல்.ஏ தலைமையில் இன்று உதயமான சிங்கம் கூட்டணியில், கார்த்திக் கூட்டணியில் அங்கம் வகித்த, மூவேந்தர் முன்னணி கழகம் இணைந்து கொண்டுள்ளது.

English summary
Vidiyal alliance broken as Moovendar munnani Kazhagam leaves the alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X