For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடக் கொடுமையே! காங்கிரஸ்- 'தொப்பி' கார்த்தி கட்சி கூட்டணி இடையே சிக்கலாமே!

By Mathi
|

சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் 'தொப்பி' கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சிக்கும் இடையேயான கூட்டணியில் சிக்கல் உருவாகிவிட்டதாம்.

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் நடிகர் கார்த்திக் காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிட விரும்பினார். இதற்காக அவர் டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினார்.

ஆனால் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து விட்டதால் அவருக்கு தொகுதி ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன், நடிகர் கார்த்திக்கை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

தென் சென்னை எடுத்துக்குங்க..

தென் சென்னை எடுத்துக்குங்க..

அப்போது அவரிடம் காங்கிரஸ் கட்சியில் தென் சென்னை தொகுதிக்கு மட்டும் தான் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அத் தொகுதியில் போட்டியிட உங்களுக்கு விருப்பமா? என்று கேட்டார்.

ஞானத்துடன் சந்திப்பு

ஞானத்துடன் சந்திப்பு

ஆனால் இதற்கு கார்த்திக் தரப்பு யோசித்து சொல்வதாக தெரிவித்தது. இன்று காலை 11 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கார்த்திக் வீட்டிற்கு சென்றார்.

தென்சென்னை ஓகேவா?

தென்சென்னை ஓகேவா?

அங்கு அவர் கார்த்திக்கை சந்தித்து பேசினார். இச் சந்திப்பின் போது, காங்கிரஸ் கட்சி சார்பில் உங்களுக்கு மதுரை தொகுதி ஒதுக்க வாய்ப்பு இல்லை- தென் சென்னையில் போட்டியிடுகிறீர்களா? என்று ஞானதேசிகன் கேட்டார்.

தென்சென்னை வேண்டாம்..

தென்சென்னை வேண்டாம்..

ஆனால் தென் சென்னையில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கார்த்திக் கூறிவிட்டாராம்.

பிரசாரத்துக்கு மட்டும் வரலாம்...

பிரசாரத்துக்கு மட்டும் வரலாம்...

அப்படியானால் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யுங்கள் என்றாராம் ஞானம்.

நாளை முடிவு அறிவிப்பு

நாளை முடிவு அறிவிப்பு

இதுபற்றி நாளை தமது முடிவை அறிவிக்கிறேன் என்றாராம் தொப்பி கார்த்திக்

English summary
Tamil actor Karthik has apparently rejected Congress offer of a ticket to contest the Lok Sabha elections from South Chennai constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X