For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து பொன்வண்ணன் திடீர் ராஜினாமா- விஷாலுக்கு எதிராக போர்க்கொடி!

நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து பொன்வண்ணன் திடீர் ராஜினாமா செய்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து பொன்வண்ணன் திடீர் ராஜினாமா- வீடியோ

    சென்னை: நடிகர் சங்க பொறுப்பில் இருந்து கொண்டு ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் விஷால் போட்டியிட்டது தவறு என கூறியுள்ளார் நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நடிகர் பொன்வண்ணன்.

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை ஏதோ ஒரு விளையாட்டு மைதானம் போல கருதிக் கொண்டு குதித்தார் விஷால். ஆனால் திரை உலகம் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.

    ராதாராவி, டிஆர் ஆதரவு

    ராதாராவி, டிஆர் ஆதரவு

    தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு ஆர்கே நகரில் விஷால் போட்டியிடட்டும் என கூறி சேரன் உள்ளிட்டோர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதற்கு ராதாரவி, ராதிகா, டி ராஜேந்தர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

    தேர்தலில் போட்டியில்லை

    தேர்தலில் போட்டியில்லை

    இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதியில் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

    சொந்த காரணங்கள்...

    சொந்த காரணங்கள்...

    இந்நிலையில் விஷாலுடன் வலம் வந்து கொண்டிருந்த நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொன்வண்ணன் இன்று திடீரென தமது பதவியை ராஜினாமா செய்தார். தாம் சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக பொன்வண்ணன் கூறியுள்ளார்.

    விஷால் போட்டியிட்டது தவறு

    விஷால் போட்டியிட்டது தவறு

    இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ஆர் கே நகரில் விஷால் போட்டியிட்டதற்கு பொன்வண்ணன் எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார். நடிகர் சங்க பொறுப்பில் இருந்து கொண்டே ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிட்டது தவறு எனவும் பொன்வண்ணன் சாடியுள்ளார்.

    English summary
    Actor Ponvannan has resigned from his post in the Nadigar Sangam due to the personal reasons .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X