For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தம்பி அரசியல்லாம் சினிமா மாதிரி ஈஸி இல்ல : விஷாலுக்கு இது யார் சொன்ன அறிவுரை தெரியுமா ?

ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ள விஷாலுக்கு ராதரவி அறிவுரை வழங்கி உள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு- போலி கையெழுத்துகள் கண்டுபிடிப்பு!!- வீடியோ

    சென்னை : ஆர்.கே நகர் தேர்தலில் விஷாலின் வேட்புமனு தாக்கலை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கத்தில் நடக்கும் போராட்டத்திற்கு நடிகர் ராதாரவி ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடக்க உள்ளது. இந்த இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ததை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கத்தில் சேரன் உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    Actor Radharavi advises Vishal for his Entry in Politics by Filing Nomination in RK Nagar Bylection

    இந்தப் போராட்டத்திற்கு தற்போது நடிகை ராதிகா, நடிகர் ராதாரவி, எஸ்.வி. சேகர் ஆகியோர் ஆதரவு அளித்து கலந்து கொண்டுள்ளனர். இதில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ராதாரவி, நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் பிரச்னைகளை அப்படியே விட்டுவிட்டு ஆர்.கே நகர் பிரச்னையை தீர்க்க விஷால் கிளம்பி உள்ளார். இங்கு தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்னையை யார் கவனிப்பார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    மேலும், திருட்டு வி.சி.டி பிரச்னையை ஒழிப்பதாக கூறி கொஞ்ச நாள் பாவ்லா காட்டிவிட்டு, தனது படம் வெளியானபோது மட்டும் சங்கப் பணத்தை செலவுசெய்து நடவடிக்கை எடுத்துவிட்டு மற்ற படங்கள் குறித்து கொஞ்சம் கூட கவலைப்படாத விஷால் மக்களின் கஷ்டத்தை எப்படி தீர்ப்பார் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார் ராதாரவி.

    அரசியலில் இருக்கும் தலைவர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன தியாகம் செய்து இருக்கிறார்கள். இவர் ஏதோ மக்களின் கஷ்டத்தை தீர்க்க பைக்கில் கிளம்பி சென்று இருக்கிறார். எதற்கு இந்த விளம்பரம் ? தம்பி விஷால் அரசியல் எல்லாம் உங்களுக்கு ஒத்து வராது. அது மிகவும் கஷ்டம். சினிமா போல அங்கு மூன்று மணி நேரத்தில் எதுவும் செய்துவிடமுடியாது, நேற்று குதிரையில் வந்து மனுத்தாக்கல் செய்தவரும், விஷாலையும் ஆர்.கே நகர் மக்கள் ஒன்றாகத் தான் பார்ப்பார்கள் என்று அறிவுரை வழங்கி உள்ளார்.

    உங்களை அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. அரசியலுக்குப் போவதாக இருந்தால் உங்கள் தயாரிப்பாளர் சங்க பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள். இராம.நாராயணன் போன்றோர் அதற்கு முன்னுதாரமாக இருந்து இருக்கிறார்கள். எனவே, அப்படி செய்யுங்கள் என்றும் ராதாரவி விஷாலை கேட்டுக்கொண்டு உள்ளார்.

    மேலும், ஆர்.கே நகர் குறித்தும், தமிழக அரசியல் வரலாறு குறித்தும் எதாவது தெரியுமா ? இப்படி எதுவுமே தெரியாமல் அரசியலுக்கு வருவது உங்களுக்கு, மக்களுக்கு இருவருக்குமே நல்லது இல்லை. ஆர்.கே நகரில் நிற்பதை விடுத்து அண்ணா நகரில் நின்றால் கூட அங்கிருக்கும் உங்கள் நண்பர்களால் 1000 ஓட்டு வாங்க வாய்ப்புள்ளதாகவும் விஷாலை விமர்சித்து உள்ளார் ராதாரவி.

    English summary
    Actor Radharavi advises Vishal for his Entry in Politics by Filing Nomination in RK Nagar Bylection .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X