For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொருளாதார தற்கொலையா? கொலை குறித்து பேசுங்கள்.. ஜக்கியை விளாசிய நடிகர் சித்தார்த்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சத்குரு ஜக்கி வாசுதேவை நடிகர் சித்தார்த் விளாசியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சத்குரு ஜக்கி வாசுதேவை நடிகர் சித்தார்த் விளாசியுள்ளார்.

தூத்துக்குடியில் மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் ஈஷா யோகா மைய நிறுவனரான ஜக்கி வாசுதேவ் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்திருந்தார்.

எனக்கு தெரியும்

எனக்கு தெரியும்

அவரது ட்விட்டர் பதிவில், ‘‘நான் தாமிரம் உருக்கும் தொழிலில் நான் வல்லுநர் இல்லை. ஆனால், இந்தியாவில் தாமிரத்தின் பயன்பாடு அதிகம் என்பதால், அதன் தேவையும் அதிகம் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

பொருளாதார தற்கொலை

நாம் சொந்தமாக தாமிரம் உற்பத்தி செய்யாமல் இருந்தால், நாம் சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியது இருக்கும். சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்கள் குறித்து சட்டப்பூர்வமாகவே அணுக வேண்டும். மிகப்பெரிய தொழில்களை அடித்துக்கொல்வது என்பது பொருளாதார தற்கொலையாகும்'' என பதிவு செய்திருந்தார்.

விளாசிய சித்தார்த்

விளாசிய சித்தார்த்

அவரது இந்த பதிவுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் நடிகர் சித்தார்த் ஜக்கி வாசுதேவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் வாய்திறக்கமாட்டார்

பிரதமர் வாய்திறக்கமாட்டார்

அதில் "முதல்வரால் வெட்கக்கேடுதான், பிரதமர் யோகாவைத் தவிர வேறு எதைப்பற்றியும் வாய்திறக்கமாட்டார் . காப்பர் உருக்காலையின் பயன்கள் குறித்து பேச இது நேரம் இல்லை சத்குரு.

கொலை குறித்து பேசுங்கள்

கொலை குறித்து பேசுங்கள்

மக்கள் காவல்துறையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். குடிமக்களைச் சுடுவது கொலை. அந்தக் கொலையைப் பற்றிப் இப்போது பேசுங்கள்' இவ்வாறு நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

English summary
Actor Siddharth slams Sadguru jakki vasudev for supporting sterlite on twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X