For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாஜ்பாய்க்கு ஏன் அஞ்சலி செலுத்தவில்லை.. அறியாமையா? அகந்தையா? நடிகர் சங்கத்தை விளாசும் எஸ்வி சேகர்

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தவில்லை என எஸ்வி சேகர் விளாசியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நடிகர் சங்கத்தை விளாசும் எஸ்வி சேகர்- வீடியோ

    சென்னை: நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தவில்லை என நடிகரும் பாஜக மூத்த தலைவருமான எஸ்வி சேகர் விளாசியுள்ளார்.

    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக் குழு பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    2017-2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுக் கணக்கு வாசிக்கப்பட்டு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது. நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள் இன்னும் 6 அல்லது 7 மாதங்களுக்குள் முடியும் என நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    6 மாதம் நீட்டிப்பு

    6 மாதம் நீட்டிப்பு

    தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடையும் நிலையில், மேலும் 6 மாதங்களுக்கு தேர்தல் நடத்தாமல் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரிய தீர்மானத்துக்கு பொதுக் குழு உறுப்பினர்கள் கரவொலி மூலம் ஒப்புதல் வழங்கினர்.

    கருணாநிதிக்கு அஞ்சலி

    கருணாநிதிக்கு அஞ்சலி

    முன்னதாக கூட்டம் தொடங்கும் முன்பு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உருவப்படத்திற்கு, நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அறியாமையா அகந்தையா?

    இந்நிலையில் இதுகுறித்து நடிகர் எஸ்வி சேகர் நடைபெற்ற நடிகர் சங்க சுய தம்பட்ட பொதுக்கூட்டத்தில் (பொதுக்குழு)மறைந்த பல கலைஞர்களுக்கு, முன்னாள் முதல்வருக்கு, அஞ்சலி செலுத்தியவர்களுக்கு, நாடே 7 நாள் துக்கம் அனுசரிக்கும் வாஜ்பாய் அவர்களுக்கு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தத்தெரியவில்லை. இது அறியாமையா ⁉️. அகந்தையா ⁉️ என கேள்வி எழுப்பியுள்ளார்.

    பேச்சால் பரபரப்பு

    பேச்சால் பரபரப்பு

    முன்னதாக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எஸ்வி சேகர் நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்த வேண்டியது அவசியம். 80 களில் இருந்து உறுப்பினராக இருக்கும் என்னை நீக்கியது செல்லாது, என் உரிமைக்காக தான் இங்கு வந்தேன். கட்டிடம் கட்டிவிட்டு தான் தேர்தல் நடத்துவோம் என சொன்னால் அதை ஏற்க முடியாது என பேசி பரபரப்பை கிளப்பியது.

    கண்டனத்துக்குரியது

    இதனிடையே நடிகர் சங்க செயற்குழுவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றாதது கண்டனத்துக்குரியது.இன்று நடிகர் சங்க செயற்குழுவில்முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது போலவே முன்னாள் பாரதப்பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வேண்டுமென ந.ச.உறுப்பினரும் பாஜககலைஅணிசெயலாளருமான சத்யன் சுட்டிக்காட்டிய பின்னரும் மறுத்தது கண்டனத்துக்குரியது என தமிழிசை தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Sve Shekar slams Nadigar sangam. Nadigar Sangam did not pay tribute to Former prime minister Vajpayee he accused.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X