• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"என்ன வாழ்க்கைடா.. ஒரு மனுஷன் எவ்ளோ வலி தாங்குவான்" தூக்கில் தொங்கிய விஜய் ரசிகர்.. கடைசி நிமிடங்கள

|

கள்ளக்குறிச்சி: "என்ன வாழ்க்கைடா இது.. எதுக்கு பொறக்கணும், யாருக்காக வாழணும்... கண்ணுல இருந்து தண்ணி அதுவா வருது... உள்ளே எவ்ளோ வலி இருக்குது.. ஒரு மனுஷன் எவ்ளோ வலிதான் தாங்குவான்... என் வாழ்க்கை ஃபுல்லா இழப்புகள்.." என்று தற்கொலை செய்து கொண்ட விஜய் ரசிகனின் ஒவ்வொரு வார்த்தையும் நம்மை நிலைகுலைய வைத்து வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன்.. இவர் ஒரு தீவிரமான விஜய் ரசிகர்.. 23 வயசுதான் ஆகிறது.. டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் படித்து முடித்தவர்.. "பாலா விஜய் மாஸ்டர்" என்ற பெயரில் ட்விட்டரில் ரொம்பவும் ஆக்டிவ்வாக இயங்கி வந்திருக்கிறார்.

என்ன ஆச்சோ தெரியவில்லை.. திடீரென தியாகதுருகத்திலிருக்கும் தன் அக்கா வீட்டில் தூக்குப் போட்டு கொண்டார்... இது குடும்பத்தினர், விஜய் ரசிகர்கள் உட்பட பல தரப்புக்கும் அதிர்ச்சியை தந்தது.. என்ன காரணம் என்று உறுதியாக தெரியவில்லை. அதனால் அவரது ட்விட்டர் பக்கத்தில் சென்று பார்த்தபோதுதான் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது அவரது பதிவுகள்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம்.. குடும்பத்தினர் தகவல்

 என்ன வாழ்க்கை?

என்ன வாழ்க்கை?

கொஞ்ச நாளாகவே அவருக்கு மன அழுத்தம் இருந்திருக்கிறது போலும், .. "நான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தா அந்த கடவுளுக்குக்கூட பிடிக்காதுபோல... என்ன வாழ்க்கைடா" என்று ஒரு பதிவு போட்டுள்ளார்.. மற்றொரு பதிவில், "எதுக்கு பொறக்கணும், யாருக்காக நாம் வாழணும்... அப்பப்போ சந்தோஷத்தை கொடுத்து பறிச்சிக்கிட்டே இருக்கான் அந்த கடவுள். அந்தகடவுள்கிட்ட இதுக்குமேல என்னால முடியாதுடா.. மொத்தமா போயிடறேன்... அப்போவாவது எந்தக் கவலையும் இல்லாம இருக்கலாம்.

கடவுள்

கடவுள்

கண்ணுல இருந்து தண்ணி அதுவா வருது... உள்ளே எவ்ளோ வலி இருக்குதுனு அப்போதான் எனக்கே தெரியுது. ஒரு மனுஷன் எவ்ளோ வலிதான் தாங்குவான்? என் வாழ்க்கை ஃபுல்லா இழப்புகள் மட்டும்தான் இருக்கு. ஒவ்வொரு தடவையும் அந்த வலியோட ஓவர்கம் பண்ணி வந்துட்டுதான் இருக்கேன்... ஆனா இப்போ, "உனக்கு சந்தோஷமே கிடையாதுடா"ன்னு கடவுள் நினைச்சிட்டான்போல.

 பதிவுகள்

பதிவுகள்

நான் இல்லைன்னா யாராவது ஃபீல் பண்ணுவீங்களா? அப்புறம் நீங்க ஃபீல் பண்ணுறது எனக்கு தெரியாமலேயே போயிடும்... இங்கே ஒருத்தருக்காவது என்னை புடிக்குமா..." என்று உச்சக்கட்ட வலியுடன் ஒவ்வொரு பதிவுகளும் நீண்டு கொண்டே போகிறது.. "தலைவன் படம் பாக்காமலேயே போறேன்... தலைவனையும்... லவ் யூ தலைவா" என்றும், "போறேன் வரவே முடியாத தூரத்துக்கு" என்றும் பதிவிட்டுள்ளார்.

 விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள்

இந்த ஒவ்வொரு வார்த்தையும் விஜய் ரசிகர்களை நிலைகுலைய வைத்துவிட்டது.. 23 வயசு இளைஞனுக்கு இவ்வளவு விரக்தியா? என்னதான் அவருக்கு தோல்வி? ஏன் இவ்வளவு வேதனையில் உழன்று கிடந்தார்? யாருமே அவனை கவனிக்கவில்லையா? போதிய அக்கறை செலுத்தவில்லையா? காதல் தோல்வியா? என்ன காரணம் என்றே தெரியவில்லை.. எதனால் இப்படி ஒரு முடிவை தேர்ந்தெடுத்தார் என்றும் புரியவில்லை.. ஆனால், லவ் ஃபெய்லியர் இல்லை என்றும், வீட்லதான் எனக்கு பிரச்சனை என்றும் அவரே பதிவிட்டும் உள்ளார்.

 லாக்டவுன்

லாக்டவுன்

இவர் டிப்ளமோ சிவில் படித்தவர்.. ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்.. அந்த வேலையும் லாக்டவுனால் இப்போது இல்லை.. வெளிநாட்டுக்கு வேலைக்கு போலாம் என்று முயற்சித்தால் பாஸ்போர்ட் தொலைந்து போய்விட்டதாம்.. வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டதால், லாக்டவுன் அவரை நொறுக்கி போட்டுவிட்டதா என்றும் தெரியவில்லை.

 சோதனை

சோதனை

4 மாசமா அக்கா வீட்டில்தான் இருந்திருக்கிறார்.. எப்போதுமே சோகத்துடன் இருந்த அவரிடம் என்ன பிரச்சனை என்று கேட்டிருக்கிறார்கள்.. "எதுவும் இல்லை.. ஒரு பிரச்சனையும் இல்லை" என்று சொன்னாராம்.. ஆனல் செல்போனில் மட்டும் எப்போதும் யாரிடமாவது நிறைய பேசி கொண்டே இருந்தாராம்.. மன அழுத்தம் வயசு வித்தியாசம் பார்க்காமல் வந்து நல்ல இதயங்களையும் உயிருடன் சேர்த்து பறித்து விடுகிறது!

 
 
 
English summary
actor vijay: kallakurichi vijays fan committed suicide due to frustration
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X