For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரசிகர்களே இப்படி செய்யலாமா.. நீங்க செய்வதை விஜய் கூடவிரும்ப மாட்டார்!

பள்ளி வளாகத்திலேயே விஜய் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    விஜய் போஸ்டரை பள்ளிக்கூடத்தில் ஒட்டிய ரசிகர்கள்- வீடியோ

    மதுரை: நடிகரின் மேல் உள்ள விசுவாசத்தை காட்ட ஒரு அளவு வேண்டாமா? ஒரு நடிகரின் திரைப்படத்தை பார்த்து ரசிப்பதில் தவறில்லை. ரசிகர் மன்றம், நற்பணி மன்றங்கள் அமைப்பதிலும் தவறில்லை. கட்அவுட் வைப்பதில் தவறில்லை. தன் உயிரினும் மேலான நடிகருக்கு போஸ்டர் ஒட்டுவதும் தவறில்லைதான். ஆனால் அதை கொண்டுபோய் ஒரு அரசு பள்ளியினுள் ஒட்டி வைத்திருக்கிறார்களே... அதுதான் தவறு..

    கடந்த ஜூன் 22-ம் தேதி நடிகர் விஜய் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடினார். கொண்டாடினர். அதேபோல மதுரையிலும் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி போஸ்டர்கள் அடித்து ஊரெல்லாம் ஒட்டப்பட்டது. சில போஸ்டர்களில் விஜயை அரசியலுக்கு வருமாறும் ரசிகர்கள் அழைத்திருந்தனர். இதனையெல்லாம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள், ஆட்கள் நடமாடக்கூடிய பகுதிகள், பரபரப்பு மிகுந்த இடங்கள், சாலைகள், தெருக்கள் என எல்லா இடங்களிலும் ரசிகர்கள் ஒட்டி மகிழ்ந்தனர்.

    Actor Vijays birthday poster at Madurai Corporation School

    இதோடு நின்றால் பரவாயில்லையே... மதுரை ராஜாஜி மருத்துவமனை அருகே மாநகராட்சி இளங்கோவன் மேல்நிலைப்பள்ளியிலேயே ஒட்டப்பட்டுள்ளது. அதுவும் பள்ளி வளாகத்திலே உள்ள வகுப்பறை சுவரில் இந்த போஸ்டர் உள்ளது. சாலையில் போவோர் வருவோர் கண்களில் படுகிற மாதிரி, உயரத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

    தங்களது வளாகத்திலேயே ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பள்ளி நிர்வாகத்தையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பள்ளியின் உயரமான பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால், அதை உடனடியாக கிழிக்க முடியாத நிலையில் பள்ளி நிர்வாகம் உள்ளது. பள்ளிக்கு அருகிலேயே சினிமா போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என்று பலமுறை காவல்துறை எச்சரித்து வந்ததுதை மறுக்க முடியாதுதான். ஆனால், அதை நிகழாமல் கண்காணிக்கவும் செய்தால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கலாமே?

    English summary
    Actor Vijay's birthday poster at Madurai Corporation School
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X