For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட... இந்திய தேர்தல் ஆணையத்தை நாடிய விஷால்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்ததால் அதை பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார் விஷால்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    விஷாலை பார்த்து அதிமுக அதிகமாக பதற்றப்படுவது ஏன்?- வீடியோ

    டெல்லி : ஆர்.கே.நகரில் போட்டியிடுவதற்காக தமது வேட்புமனுவை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தை நடிகர் விஷால் நாடியுள்ளார்.

    ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட விஷாலும்,தீபாவும் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புனுக்களை நேற்றைய தினம் அதிகாரிகள் பரிசீலனை செய்தனர்.

    Actor Vishal approaches EC to consider his nomination

    அப்போது ஆனால் படிவம் 26-ஐ பூர்த்தி செய்யவில்லை என்று கூறி தீபாவின் மனுவையும் முன்மொழிந்த 2 பேர் வேட்புமனுவில் உள்ளது தங்களது கையெழுத்து இல்லை என்பதால் விஷாலின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.

    இதையடுத்து விஷால் தண்டையார்பேட்டை அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டார். பின்னர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வேண்டுகோள் விடுத்தவுடன் விஷாலின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அதிகாரி அறிவித்தார்.

    ஆனால் விஷால் வீடு திரும்பியதும் அவரது வேட்புமனுவை நிராகரித்ததாக அதிகாரி அறிவித்துவிட்டார். இதை கண்டித்து ஜனாதிபதி ராம் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு விஷால் டுவிட்டரில் தனது வேட்பு மனு நிராகரிப்பு குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து நடிகர் விஷால் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனது வேட்புமனுவை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

    English summary
    Actor Vishal files plea in Indian Election Commission to consider his nomination which was rejected by TN Election Commission yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X