For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஷால் மீது காட்டமாக பாய்ந்த ராதாரவி!

நடிகர் விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்து உள்ளார் நடிகர் ராதாரவி .

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த நடிகர் விஷாலின் வேட்புமனு போதிய விபரங்கள் இல்லாததாலும், போலி கையெழுத்து போடப்பட்டு இருந்ததாலும் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பேட்டி அளித்த நடிகர் ராதாரவி கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஆர்.கே நகருக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இன்று அதன் மீது நடந்த பரிசீலனையில் தீபா, நடிகர் விஷால் ஆகியோரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

Actor Vishal is doing fraud things everytime that now exposed in RK Nagar Election Nomination says Actor Radharavi

அதேபோல போலி கையெழுத்து பயன்படுத்தி இருந்ததாலும், முறையான வங்கி கணக்கு ஆவணங்களை காட்டாததாலும் விஷாலின் வேட்புமனு நிராகரிப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் முன்பு தெரிவித்தனர்.

இதையடுத்து பேட்டி அளித்த நடிகர் ராதாரவி, தேர்தல் மனு நிராகரிப்பு முதல் கட்டம் தான். இனி அடுத்தடுத்து நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என தொடர்ந்து நிராகரிக்கப்படுவார். விரைவில் திரையுலகை விட்டே விரட்டப்படுவார்.

வேட்புமனு படிவத்தையே சரியாக நிரப்ப முடியாதவர் எப்படி தமிழக மக்களை ஆளலாம் என்று நினைக்கலாம் இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. போலி கையெழுத்து போட்டு தேர்தலில் நிற்க வேண்டிய அவசியம் தற்போது என்ன வந்தது விஷாலுக்கு ?

இதில் மட்டும் அல்ல ஏற்கனவே நடிகர் சங்கத்திலும் தனக்கு ஆதரவாக ஒரு சிலரை வைத்துக்கொண்டு இப்படித்தான் ஃபிராடு செய்தார். அவரது ஃபிராடு குறித்து கேள்விப்பட்ட இவரது ஆதரவாளர்கள் பலர் இப்போது இவரை விட்டு விலகி இருக்கிறார்கள். விரைவில் இதற்கு எல்லாம் விஷாலுக்கு பாடம் புகட்டப்படும்.

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க தான் நிச்சயம் வெற்றி பெறும். அதில் சந்தேகமே இல்லை என்றார் ராதாரவி. ஆனால் இரவில் நடந்த பெரும் போராட்டத்திற்குப் பிறகு விஷாலின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.

English summary
Actor Vishal is doing fraud things everytime that now exposed in RK Nagar Election Nomination says Actor Radharavi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X