For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே குழப்பமப்பா... புகார் மனுவில் தேர்தல் அதிகாரி முகவரியை தப்பாக போட்ட விஷால்!

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதில் தேர்தல் அதிகாரி முகவரியை தவறாக போட்டதால் நடிகர் விஷால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தமிழக தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்த நடிகர் விஷால் அதில் தேர்தல் ஆணைய அலுவலக முகவரியை தவறாக போட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட நடிகர் விஷாலின் வேட்பு மனு உள்ளே வெளியே ஆட்டத்திற்கு பிறகு நிராகரிக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தியில் உள்ள விஷால் இது தொடர்பாக சட்ட ரீதியான முறையிடப் போவதாக கூறினார்.

இதன் தொடர்ச்சியாக இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானியை சந்தித்து மனு நிராகரிக்கப்பட்டது குறித்து முறையிட்டார். மேலும் தன்னுடைய வேட்பு மனுவில் மட்டும் பாரபட்சம் காட்டப்பட்டதாக விஷால் ராஜேஷ் லகானியிடம் புகார் தெரிவித்திருந்தார்.

தப்பான அட்ரஸ் போட்ட விஷால்

தப்பான அட்ரஸ் போட்ட விஷால்

தன்னுடைய கோரிக்கைகளை புகார் மனுவாகவும் விஷால் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானியிடம் கொடுத்திருந்தார். சட்டப்படி முறையிடப் போவதாக சொன்ன விஷாலுக்கு தேர்தல் ஆணைய அலுவலக விலாசம் கூட தெரியாமல் போனது தான் கேலிக்கூத்தாகியுள்ளது.

புகார் தந்தது தலைமைச் செயலகத்தில்

புகார் தந்தது தலைமைச் செயலகத்தில்

அவர் ராஜேஷ் லகானியிடம் அளித்துள்ள மனுவில், ராஜேஷ் லகானி, தேர்தல் ஆணையர் என்றும், மாநில தேர்தல் ஆணையம், அரும்பாக்கம் என்றும் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. விஷால் புகார் அளித்ததோ தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத்தேர்தல்களுக்கான அதிகாரியிடம் ஆனால் புகார் மனுவில் இடம்பெற்றிருந்ததோ மாநில தேர்தல் ஆணையரின் கோயம்பேடு முகவரி.

அது கூடவா பார்க்கல

அது கூடவா பார்க்கல

பொதுத்தேர்தல்கள் நடத்துவது யார், உள்ளாட்சி தேர்தல்கள் நடத்துவது யார் என்ற குறைந்தபட்ச வித்தியாசம் கூடவா தெரியாமல் விஷால் தேர்தலில் போட்டியிட வந்தார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. என்னப்பா இது தலைமைச் செயலகம் வந்து அரும்பாக்கம் அட்ரெஸ் போட்டு புகார் மனு கொடுத்தா எப்படி, குறைந்தபட்சம் மனுவை கொடுக்குறதுக்கு முன்னாடி சரிபார்த்திருக்கலாம்.

ஆளநர் முகவரியில தப்பு பண்ணிடாதீங்க

ஆளநர் முகவரியில தப்பு பண்ணிடாதீங்க

வேட்பு மனு தாக்கலில் தொடங்கிய குழப்பம் நடிகர் விஷாலுக்கு மனு நிராகரிக்கப்பட்ட பின்னரும் நீடிக்கிறது. இது போகட்டும் ஆளுநரிடம் கொடுக்கும் மனுவிலாவது சரியான விலாசத்தை போடுங்க விஷால்.

English summary
Actor Vishal mentioned state election comissioner address in complaint petition instead of TN Chief election officer Rajesh lakhoni as he granted the compalint petition to him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X