For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"எப்பவுமே அப்பா தான் ஹீரோ.. அம்மா தான் ஹீரோயின்.. ஓகே".. விழுப்புரத்தையே வியப்பில் ஆழ்த்திய விவேக்!

விழுப்புரம் பள்ளி மாணவர்களிடையே விவேக் உரையாற்றினார்

Google Oneindia Tamil News

விழுப்புரம்: "ஒரு மாணவிக்கு முதல் ஹீரோ தன் அப்பாதான்.. மாணவனுக்கு முதல் ஹீரோயின் தன் அம்மாதான்.. இப்படி நினைத்தால் எந்த மாணவ, மாணவியரும் வாழ்க்கையில் முன்னேற முடியும்" என்று நடிகர் விவேக் அறிவுறுத்தி உள்ளார்.

வெறும் நடிப்பையும் தாண்டி.. மக்களிடம் நெருக்கமாகவும், குறிப்பாக மாணவர்களிடம் உரிமையாகவும், அக்கறையாகவும் பழகக்கூடியவர் நடிகர் விவேக்!

விவேக்கிடம் 1 கோடி மரக்கன்றுகளை நடுமாறு மறைந்த அப்துல் கலாம் சொல்லி இருந்தார். இதையடுத்து, கிரீன் கலாம் என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வருகிறார் நடிகர் விவேக். இது சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரையும் வழங்கி வருகிறார்.

டெல்லியில் ஆம் ஆத்மி தொண்டரை பளார் என அறைய பாய்ந்த காங். பெண் வேட்பாளர் அல்கா லம்பா டெல்லியில் ஆம் ஆத்மி தொண்டரை பளார் என அறைய பாய்ந்த காங். பெண் வேட்பாளர் அல்கா லம்பா

விழுப்புரம்

விழுப்புரம்

அதன்படி, விழுப்புரம் பானாம்பட்டு சாலையில் உள்ள அக்ஷர்தம் சென்ட்ரல் சிபிஎஸ்இ தனியார் பள்ளியின் முதலாம் ஆண்டு விழாவிலும் விவேக் கலந்து கொண்டு பேசினார். விழாவிற்கு பள்ளியின் தாளாளரும், முன்னாள் எம்பியுமான டாக்டர் லட்சுமணன் தலைமை தாங்கினார்... பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசு, சான்றிதழ்களை வழங்கி விவேக் பேசியதாவது:

டிவி சீரியல்கள்

டிவி சீரியல்கள்

"இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள், பிள்ளைகளின் உறவுமுறை எப்படி உள்ளது தெரியுமா? ஒரே வீட்டில் இருந்துகொண்டே ஒரு அப்பா, தன் பையனுக்கு இ-மெயில் மூலம் பேசுகிற நிலைமையில் உள்ளது.. பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளிடம் அன்பை பொழியுங்கள்.. ஆனால் செல்லம் மட்டும் தராதீங்க.. டிவி சீரியல்களில் இப்போதெல்லாம் பெண்களுக்கு, எதிர்மறை சிந்தனைகளை புகுத்தி வருகின்றனர்.

முதல் ஹீரோ

முதல் ஹீரோ

நாட்டில் தற்போது குழந்தைகள், மாணவர்கள் கையில் செல்போன் புழக்கம் அதிகமாக உள்ளது.. இது அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் நிலைக்கு கொண்டு செல்லும். இதை முதலில் நெறிமுறைப்படுத்த வேண்டும். ஒரு மாணவி தனது வாழ்க்கையில் முன்னேற, முதல் ஹீரோவாக தன்னைப்பெற்ற தந்தையைத்தான் பார்க்க வேண்டும்.

ஹீரோயின்

ஹீரோயின்

அதுபோல் ஒரு மாணவன், தனது தாயைத்தான் முதல் ஹீரோயினாக நினைக்க வேண்டும். அதுபோன்று நினைப்பதற்கு ஒவ்வொரு பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகளுக்கு அன்பையும், கரிசனத்தையும் காட்டுங்கள்... தயவு செய்து குடும்ப பிரச்சினைகளை அந்த குழந்தைகளிடம் காட்டிவிடாதீர்கள்!" என்றார். விவேக் பேசிய இந்த பேச்சு தற்போது இணையத்திலும் வைரலாகி வருகிறது. பல மாணவர்கள் இதனை ஷேர் செய்தும் வருகின்றனர்.

English summary
actor viveks villupuram school function speech and this speech becomes viral now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X