For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நல்ல தலைமை வந்தால் ஏற்க வேண்டியது நமது கடமை.. கமல் குறித்து மனம் திறந்த கவுதமி

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது குறித்து நடிகை கவுதமி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    நல்ல தலைமை வந்தால் ஏற்க வேண்டியது நமது கடமை.. கமல் குறித்து மனம் திறந்த கவுதமி-வீடியோ

    நாமக்கல் : அரசியலில் தலைமை என்பது தனி விஷயம், தலைமைக்கு சரியானவர்களை ஆதரிக்கும் கடமை அனைவருக்கும் உள்ளது என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

    நாமக்கலில் ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையை நடிகை கவுதமி இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பொதுமருத்துவ முகாமையும் அவர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : அரசியலில் தலைமை என்பது தனி விஷயம். இந்த தலைமைக்கு யார் சரியாக இருப்பார்களோ அவர்களை ஆதரிக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு.

     சரியான தலைமையை ஆதரிப்போம்

    சரியான தலைமையை ஆதரிப்போம்

    இன்றைய தலைமுறைக்கு ஏற்ப அரசியலில் யார் வந்தால் சரியாக இருக்குமோ அவர்களை ஆதரிக்க வேண்டும். இந்த கடமை நம் அனைவருக்கும் உள்ளது என்று கவுதமி கூறியுள்ளார்.

     கமல் நட்பு முறித்த கவுதமி

    கமல் நட்பு முறித்த கவுதமி

    அண்மையில் நடிகர் கமல்ஹாசனுடனான நட்பை முறித்துக் கொண்ட கவுதமி பாஜகவுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். நீட் விவகாரத்திலும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

     முழுமூச்சுடன் பொது நிகழ்ச்சிகளில்

    முழுமூச்சுடன் பொது நிகழ்ச்சிகளில்

    பொது நிகழ்ச்சிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வரும் கவுதமி பாஜகவில் சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவின. இருப்பினும் அதுகுறித்து பகிரங்கமாக பேசாமல் உள்ளார் கவுதமி.

     அரசியல் முக்கியத்துவம்

    அரசியல் முக்கியத்துவம்

    இந்நிலையில் தமிழக அரசியலில் தனிக்கட்சியைத் தொடங்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் கமல்ஹாசனின் வருகை குறித்து கவுதமி தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    English summary
    Actress Gautami inaugurated medical camps at Namakkal and told in a press conference that who ever is suits for Politics and as a leader, people will support them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X