ரஜினி வீடு வரைக்கும் போய் விட்டு, "அம்மா"வை பார்க்காம வந்திட்டீங்களே ராதிகா?
சென்னை: நடிகை ராதிகா சரத்குமார், தனது குழந்தைகளுடன் போய் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தைப் பார்த்து விட்டு வந்துள்ளார். தனது குழந்தைகள் ரஜினி சந்திப்பால் துள்ளிக் குதித்து உற்சாகமடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ரஜினியை ரசிப்பது, வேடிக்கை பார்ப்பது என்பது ரசிகர்களிடம் மட்டுமல்ல, நடிகர், நடிகையரிடமும் உள்ள ஒரு பழக்கமாகும். ரஜினிக்கு பல நடிகர், நடிகையரும் கூட ரசிகர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் டிவி மற்றும் சினிமா நடிகை ராதிகா, தனது மகன் ராகுல் மற்றும் மகள் ரேயான் ஆகியோருடன் ரஜினியைப் போய்ப் பார்த்துள்ளார்.

நேற்று இவர்கள் ரஜினியைப் பார்த்துள்ளனர். இதுகுறித்த சந்திப்பையும், புகைப்படங்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ராதிகா.
ரஜினியைப் பார்க்கப் போகிறோம் என்ற ஒரே காரணத்திற்காகவே தனது பிள்ளைகள் ஞாயிற்றுக்கிழமை காலை ரொம்ப சீக்கிரமே எழுந்து விட்டதாகவும் ராதிகா கூறியுள்ளார்.
ராகுல், ரேயான் போல, ராதிகாவும் கூட, ரஜினியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
போயஸ் கார்டன் வரை போய்ட்டீங்க.. அப்படியே பக்கத்து வீட்டில் இருக்கும் "அம்மா"வையும் ஒரு எட்டு பார்த்து விட்டு வந்திருக்கலாமே ராதிகா?