For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

15 நடிகைகள் ‘மக்களின் முதல்வர்’ கட்சியில் சேர காத்திருக்கிறோம்: ஷகிலா பரபரப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: விரைவில் அதிமுகவில் சேரும் ஐடியாவில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார் நடிகை ஷகிலா. மேலும், தன்னோடு 15க்கும் மேற்பட்ட நடிகைகள் அதிமுகவில் சேர தயாராக இருப்பதாகவும், ஜெயலலிதாவின் அழைப்பிற்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டைம்பாஸ் வார இதழுக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார் ஷகிலா. அதில் அவர் கூறியிருப்பதாவது,

பெங்களூரு சிறையில் அம்மா அடைபட்ட போது அவர்களுக்கு நேர்ந்த சிரமத்தை எண்ணி மனம் வருந்தினேன். நான் அதிமுகவில் இல்லை. ஆனால், சின்ன வயதில் இருந்தே எம்.ஜி.ஆரையும் அம்மாவையும் பிடிக்கும். நீண்ட நாட்களாக நான் அம்மா அபிமானி.

Actress Shakeela wants to join ADMK

ஒரு பொண்ணா, தனியா இருந்து தைரியமா பல விஷயங்களைச் சந்திச்சிருக்காங்க. அரசியலில் எத்தனையோ எதிரிகளைச் சந்திச்சு வெற்றி கண்டிருக்காங்க. மக்களுக்காக தன்னோட வாழ்க்கையை அர்ப்பணிச்சு, பல நல்ல காரியங்களைச் செய்திருக்காங்க.

எனக்கும் அதிகமுகவில் சேரும் ஐடியா இருக்கு. நான் மட்டுமல்ல, என்னோட 15க்கும் மேற்பட்ட நடிகைகள் அம்மா கட்சியில் சேர ரெடியா இருக்காங்க. அதற்கான அழைப்பு அம்மாகிட்ட இருந்து வரும்னு காத்திருக்கோம்.

தேர்தல் சமயத்துல ஏற்கனவே சிலர் பிரச்சாரம் செய்ய என்னைக் கூப்பிட்டாங்க. ஆனால், காசு வாங்கிட்டு பிரச்சாரத்துக்குப் போக எனக்கு சம்மதமில்லை. இப்போ அம்மாவுக்காக பிரச்சாரம் செய்ய தயார் ஆகிட்டேன்.

எனக்கு தற்போது சினிமா வாய்ப்பில்லை என யார் சொன்னது. என் கைவசம் தற்போது 10 படங்கள் இருக்கு. புது டைரக்டர் ரவிக்குமாரோட உண்மை படத்தில் அரசியல்வாதியாகவே நடிக்கிறேன். அது என்னோட கேரியரை இன்னும் உயர்த்தும்.

கல்யாணம் செஞ்சு என்னங்க சாதிக்கப் போறோம். அம்மாவைப் பாருங்க மேரேஜ் செஞ்சுக்காமலே தைரியமா வாழலையா?.யாருமே செய்ய முடியாத சாதனைகளை செஞ்சு காமிக்கலையா, அவங்களோட தைரியத்தை வழிகாட்டுதலா எடுத்துக்கிட்டு இப்படியே இருந்துடலாம்னு நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் ஷகிலா.

English summary
In an interview to a Tamil weekly magazine, the actress Shakeela has said that she wants to join ADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X