என் மகள் சம்மதத்துடன் தான் அழைத்து வந்தேன் - நடிகை வனிதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார், தனது 2-வது கணவர் ஆனந்த ராஜின் மகளை கடத்திச் சென்று விட்டதாக தெலங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார், டி.வி. நடிகர் ஆகாஷை திருமணம் செய்திருந்தார். அவரை பிரிந்த பிறகு தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத்தைச் சேர்ந்த ராஜன் என்ற ஆனந்தராஜனை 2009-ம் ஆண்டு 2வது திருமணம் செய்து கொண்டார்.

actress Vanitha had taken her daughter

இவர்களுக்கு ஜெனிதா ராஜன் என்ற மகள் உள்ள நிலையில், இருவரும் 2011-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். வனிதாவின் சம்மதத்தின்பேரில், ஜெனிதாவை ஆனந்தராஜே வளர்த்து வந்தார். இந்தநிலையில் மகளை வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக, தெலுங்கானா மாநிலம் சைதராபாத் போலீசில் ஆனந்தராஜன் புகார் அளித்துள்ளார்.

இதன்பேரில், குழந்தை கடத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வனிதா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நடிகை வனிதா கூறுகையில், ஆனந்தராஜிடம் விவாகரத்து பெற்று சென்ற பிறகு அவர் வசிக்கும் முகவரிகூட எனக்கு தெரியாது.

என் குழந்தையையும் கூடவே அழைத்துச் சென்றுவிட்டார். இதற்கிடையே இமெயில் முகவரி மூலம் எனது தொலைபேசி எண்ணை தெரிந்துகொண்ட என் மகள் என்னிடம் பேசினாள். தன்னை வந்து அழைத்துச் செல்லும்படி கூறினாள். அதன்பேரில் ஹைதராபாத் சென்று போலீஸ் நிலையத்தில் இது பற்றி புகார் கொடுத்ததுடன் அவர்களுடன் சென்று குழந்தையை அழைத்து வந்தேன். இது எப்படி கடத்தல் ஆகும். இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Vanitha had taken her daughter Jainitha to her home in Chennai with the consent of her ex-husband
Please Wait while comments are loading...