For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோடை விடுமுறை: 8 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 8 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளன.

Additional coaches in trains

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோயம்புத்தூர்-ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் கொங்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்.12647/12648) கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி (ஸ்லீப்பர் கிளாஸ்) பெட்டி நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளது. இந்த சேவை கோயம்புத்தூரிலிருந்து வருகிற 22ஆம் தேதியும், ஹஸ்ரத் நிஜாமுதீனிலிருந்து 25ஆம்தேதியும் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

திருச்சி-ஹவுரா இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் திருச்சி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயிலில் (12664/12663) கூடுதலாக ஒரு மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த சேவை திருச்சியிலிருந்து நாளை முதலும், ஹவுராவிலிருந்து வருகிற 22ஆம்தேதியும் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.

கோயம்புத்தூர்-சென்னை சென்டிரல் இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் (12682/12681) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளது. இந்த சேவை கோயம்புத்தூரிலிருந்து நாளை முதலும் சென்னை சென்டிரலிருந்து வருகிற 21ஆம்தேதியும் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

சென்னை சென்டிரல்-நாகர்கோவில் இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் (12682/12681) கூடுதலாக 2 படுக்கை வசதி பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட இருக்கிறது. இந்த சேவை கோயம்புத்தூரிலிருந்து நாளை முதலும், சென்னை சென்டிரலிருந்து வருகிற 21ஆம்தேதியும் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

சென்னை சென்டிரல்-ஜம்மு தாவி இடையே இரு மார்க்கமாகவும் (வாரம் மூன்று முறை) இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16031/16032) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த சேவை சென்னை சென்டிரலிருந்து நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. ஜம்முதாவியிலிருந்து நாளை முதல் செயல்பட இருக்கிறது.

சென்னை சென்டிரல்-லக்னோ இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும் வார இருமுறை எக்ஸ்பிரஸ் ரயிலில் (16093/16094) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த சேவை சென்னையில் 21ஆம்தேதியும், லக்னோவிலிருந்து 23ஆம்தேதியும் செயல்பாட்டுக்கு வரஇருக்கிறது.

ராமேசுவரம்-குஜராத் மாநிலம் ஒகா இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் (16733/16094) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த சேவை ராமேசுவரத்திலிருந்து நாளை முதலும், ஒகாவிலிருந்து வருகிற 24ஆம்தேதியும் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.

சென்னை சென்டிரல்-பழனி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (22651/22652) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த சேவை சென்னையில் நேற்று தொடங்கப்பட்டது. பழனியில் இருந்து இன்று முதல் செயல்படுத்தப்பட இருக்கிறது.

English summary
Southern Railway will augment the following trains with additional coaches: Chennai Central-Nagercoil-Chennai Central weekly express (Train Nos.12689/12690) will be permanently augmented with two second class sleeper coaches from Chennai Central with effect from March 20 and from Nagercoil with effect from March 22.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X